தூத்துக்குடியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பள்ளி மாணவிகளுக்கான ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெற்றது.
விழாவில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் முனுசாமி முதல் மூன்று இடங்களைப் பிடித்து வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
14 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிாிவிலும், 14 வயதிற்குட்பட்ட இரட்டையர் பிாிவிலும் சென்னை மாவட்ட மாணவி முதலிடமும், கன்னியாகுமரி மாவட்ட மாணவி இரண்டாமிடமும், தூத்துக்குடி மாவட்ட மாணவி மூன்றாமிடமும், 14 வயதிற்குட்பட்ட இரட்டையர் பிாிவில் 17 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிாிவில் தூத்துக்குடி பள்ளி மாணவி முதலிடமும், சென்னை மாவட்ட மாணவிகள் இரண்டாம் மூன்றாமிடமும், 17 வயதிற்குட்பட்ட இரட்டையர் பிாிவில் தூத்துக்குடி பள்ளி மாணவிகள் முதலிடமும், சென்னை பள்ளி மாணவிகள் இரண்டாமிடமும், சேலம் பள்ளி மாணவிகள் மூன்றாமிடமும், 19 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிாிவில் சென்னை மாவட்ட மாணவி முதலிடமும், திருச்சி மாவட்ட மாணவி இரண்டாமிடமும், நாமக்கல் மாவட்ட மாணவி மூன்றாமிடமும், 19 வயதிற்குட்பட்ட இரட்டையர் பிாிவில் 1-ம் இடம் தூத்துக்குடி பள்ளி மாணவிகள் முதலிடமும், சென்னையைச் சார்ந்த பள்ளி மாணவிகள் இரண்டாம் மூன்றாமிடமும் பெற்ற மாணவிகளுக்கு பாிசுகள் பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் முனியசாமி சிவகங்கை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 250 மாணவியர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனைவர் கண்ணதாசன் செய்திருந்தாா். வேப்பலோடை தலைமை ஆசிரியர் சேகர் நன்றியுரையாற்றினாா்.