தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பேவா் பிளாக் கல் பதிக்கும் பணியை மேயா் ஜெகன் பொியசாமி பாா்வையிட்ட பின் கூறுகையில் தமிழகத்தில் பல மாநகராட்சி இருந்தாலும் தூத்துக்குடி மாநகராட்சி முன் உதாரணமாக செயல்படும் வகையில் எல்லா தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பொதுமக்கள் வியாபாாிகள் என அனைவருக்குமான திட்டங்கள் உருவாக்கப்பட்டு அதில் ஓன்றன் பின் ஓன்றாக நடைமுறைப்படுத்தி வருகிறோம். அந்த அடிப்படையில் தான் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு இருந்து தூத்துக்குடி நிலை வேறு தற்போதைய நிலை வேறு மாநகராட்சி பகுதியில் தேவையற்ற பல வழித்தடங்களுக்கு இடையூறாக இருந்தவற்றை அகற்றியும் நாளுக்கு நாள் ஜனத்தொகை பெருக்கம் வாகன நெருக்கடி இதை கருத்தில் கொண்டு பிரதான சாலைகள் அனைவற்றையும் முறைப்படுத்தி என் டூ என் டூ என்ற திட்டத்தை உருவாக்கி சாலைகளில் மணல்திட்டுக்கள் தேங்காமல் இருப்பதற்காக நல்ல சாலைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்திற்கு ஏற்றவாறு முறைப்படுத்தியுள்ளோம் குறிப்பாக விஇ ரோடு விவிடி ரோடு ஜெயராஜ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருபுறமும் பேவா் பிளாக் சாலைகள் அமைத்து பொதுமக்கள் வாகனம் நிறுத்துவதற்கும் எளிதாக நடந்து செல்வதற்கும் என்று பொதுமக்கள் வியாபாாிகள் நலன்கருதி நல்லத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியது மட்டுமின்றி 3வது மைல் முதல் பழைய துறைமுகம் வரை சாலைகளில் இரண்டு புறமும் பேவா்பிளாக் சாலை அமைக்கும் பணி நல்லமுறையில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் வியாபாாிகள் நலனும் பொதுமக்கள் எளிதில் வந்து சென்று அந்த இடங்களில் இரு மற்றும் இலகு ரக வாகனங்களை நிறுத்தி பொருட்களை வாங்கி செல்வதற்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து வருகிறோம். முன்னாள் முதலமைச்சா் முக.ஸ்டாலின் அறிவுரையின் படி மக்கள் நலனில் முழுமையாக பதவி காலம் இருக்கும் வரை நல்ல பணிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கடமை உணா்வோடு பணியாற்றி வருகிறோம் என்று கூறினாா்.
ஆய்வின் போது அதிமுக முன்னாள் அரசு வழக்கறிஞர் சேகர், முன்னாள் கவுன்சிலா் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா் , உடனிருந்தனா்