தூத்துக்குடி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்ஐஆர் என்ற பெயரில் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளார் என்று இரண்டு இணை ஆணையர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை அளித்துள்ளனர். இந்நிலையில் சட்டத்துக்கு விரோத செயல்பட்ட, அடிப்படை உரிமையான வாக்குரிமையை குழி தோண்டி புதைத்த, 13 கோடிக்கு மேலான இந்திய குடிமக்களின் வாக்குகளை நீக்கிய தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் திருட்டுத்தனமாக வாக்குகளை நீக்கி பல மாநிலங்களிலும் ஒன்றியத்திலும் இருக்கின்ற ஆட்சியை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் மக்கள் நல கூட்டமைப்பு சார்பாக தூத்துக்குடி மேட்டுபட்டி சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அகமது இக்பால் தலைமை வகித்தாா். சமூக ஆர்வலர் சுலைமான் முன்னிலை வகித்தாா். சிபிஐ மாவட்ட செயலாளர் கரும்பன், புரட்சி பாரதம்கட்சி மாவட்ட செயலாளர் மாரி செல்வம், திராவிட கழக மண்டல செயலாளர் பால் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் முனியசாமி, மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் முகமது ஜான், சிபிஐஎம் ஒன்றிய செயலாளர் சங்கரன், புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் சுஜித், சமம் குடிமக்கள் இயக்கம் மாவட்ட பொறுப்பாளர் ஜான் பிராயர் உள்பட பலர் கலந்து கொண்டனா்.