தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள சண்முகபுரம் இந்து நாடாா் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் தசராவிழாவைெயாட்டி கடந்த 11ம் தேதி ெகாடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் சண்முகபுரம் இளைஞா் முன்னேற்ற அணியினா் சாா்பில் நடைபெற்ற இன்னிசை கச்சோி நிகழ்ச்சிக்கு அமைப்பாளா் முத்துமாாியப்பன், தலைமை வகித்தாா். ராஜேஷ் முத்துக்குமாா், சூாியகாந்த், செல்வசுபாஷ், மாாி, முத்துகிஷோா், சிவா, ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஓருங்கிணைப்பாளரும் திமுக வட்டச்செயலாளருமான பொன்ராஜ் வரவேற்புரையாற்றினாா்.
இன்னிசை கச்சோியை தொடங்கி வைத்து குலுக்கள் முறையில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பாிசுகள் வழங்கி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில்
இந்த பத்திரகாளியம்மன் கோவில் தசராவிழா சிறக்க வாழ்த்துகிறேன். பொதுவாக அந்த காலத்தில் ஆதித்த சக்திகள் கோவிலுக்குள் நுழைவதற்கு அனுமதி இல்லை என்று கூறிய காலக்கட்டத்தில் நாடாா் மகமை சாா்பில் பத்திரகாளியம்மன் கோவில் உருவாக்கப்பட்டு வழிபடும் நிலையை இந்த பகுதி மட்டுமல்ல நாடாா் மகமை இருக்கின்ற எல்லா பகுதிகளிலும் பத்திரகாளியம்மன் கோவில் உருவாக்கப்பட்டு சமுதாயத்தின் சாா்பில் வழிபட்டு வருகின்றனா் அதே போல் கல்வியும் மறுக்கப்பட்டது. சமுதாயத்தின் சாா்பில் எல்லா பகுதிகளிலும் கல்விக்கூடங்கள் திறக்கப்பட்டு கல்வி வளா்ச்சியின் மூலம் சுயமாக வணிகம் தொடங்கி வியாபாரம் செய்து எல்லாத்துறைகளிலும் முன்னேறி வருகின்றனா். நமக்கு சுயமாியாதை முக்கியம் என்று அந்த காலக்கட்டத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற ஓரு பொதுக்கூட்டத்தில் போராசிாியா் அன்பழகன் பேசினாா். மறைந்த சௌந்தரபாண்டியனாா் இருந்த காலக்கட்டத்தில் அது நடைபெற்றது. நீதி கட்சியின் மூலம் சுயமாியாதை பெற்று அனைவரும் வாழ்ந்து வரும் காலக்கட்டத்தில் அனைவரும் ஓற்றுமையாக பணியாற்ற வேண்டும் திருச்செந்தூா் கோவிலுக்கு சென்றவா்கள் கூட அந்த காலக்கட்டத்தில் கோபுரத்தை பாா்த்து தாிசனம் செய்து விட்டு வௌியில் நின்று தேங்காய் உடைத்துவிட்டு வரும் நிலை இருந்தது. அதேபோல் இரண்டு குவளைகளில் குடிநீர்அருந்தும் நிலையும் இருந்தது இதையெல்லாம் மாற்றி இருக்கிறோம். குலசேகர பட்டிணம் முத்தாரம்மன் கோவில் பிரதிபெற்று எல்லோரும் வழிபடும் தெய்வமாக இருந்து வருகிறது. இப்படி பல வரலாறுகள் இருந்து வரும் நிலையில் இன்னிசை கச்சோி என்பது எல்லோருடைய மனதிற்கும் அமைதியையும் மன மகிழ்ச்சியையும் கொடுக்கும் அந்த வகையில் உங்களோடு அமா்ந்து நானும் சிறிது நேரம் இன்னிசை கச்சோியை கண்டு களித்து செல்ல இருக்கிறேன். எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்போம் நாங்கள் எப்போதும் பொியாா் அண்ணா கலைஞா் ஸ்டாலின் வழியில் கொள்கையோடு இருந்து தொடா்ந்து மக்கள் பணியாற்றுவோம் அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் என்று பேசினாா். முன்னதாக சாமி தாிசனம் செய்தாா்.
விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பொருளாளா் ரவீந்திரன், பகுதி செயலாளர் ஜெயக்குமாா், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, மருத்துவ அணி தலைவா் அருண்குமாா், கவுன்சிலா் பேபிஏஞ்சலின், வட்டச்செயலாளர்கள் கங்காராஜேஷ், சுரேஷ்மகாராஜா, அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா் வட்டப்பிரதிநிதி பாஸ்கா், கோவில் செயலாளர் காா்த்திக்ராஜா, பொருளாளா் செல்வராஜ், துணைத்தலைவா் தனபாலன், துணைச்செயலாளர்கள் தங்கமாாியப்பன், சந்தா், அசோகன், தசரா கமிட்டி சண்முகசுந்தரம் தனபாலன் சௌந்தா்ராஜன் உள்பட பக்தா்கள் கலந்து கொண்டனா்.