தூத்துக்குடி மீளவிட்டான் காமராஜ் நகர் பகுதியில் புதிதாக அரசு
மதுபான கடை அமைக்க கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதி அருகே கோவில் ,தேவாலயம் மற்றும் குடியிருப்பு ஆகியவை அதிக அளவில் இருப்பதால் இங்கு புதிதாக அரசு மதுபான கடை அமைக்க கூடாது என வலியுறுத்தி மீளவிட்டான் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்த நிலையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான எஸ்.பி சண்முகநாதன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டும் வரும் மக்களை நேரில் சந்தித்து அதிமுக சார்பில் ஆதரவனை தெரிவித்தார் அதனை தொடர்ந்து பேசிய
முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன்
இந்தப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் அரசு மதுபான கடைக்கு எதிராக போராடிவரும் மக்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க அதிமுக சார்பில் ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பொழுது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் இந்த ரீல்ஸ் அரசை நீங்கள் ஒரு மாயையில் வாக்களித்து வெற்றி பெற செய்து விட்டீர்கள். நீங்கள் உங்கள் பகுதியில் உங்களுக்காக உழைக்கின்ற ஒரு அரசியல் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்து இருந்தால் இன்று உங்களை தேடி வந்து உங்கள் குறைகளை கேட்டிருப்பார்கள். ஆனால் இன்று சினிமா நடிகருக்கு வாக்களித்ததனால் அவர்கள் சொகுசு வாழ்க்கையில் தான் இருக்கிறார்களை தவிர கிராமப்புற மக்களின் தேவைகள், குறைகள், அவர்களின் உணர்ச்சிகள் குறித்து அவர்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை. இன்று இந்த த.வெ.க அரசு பொறுப்பேற்றதிலிருந்து மின்சாரம் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என பல்வேறு அத்தியாவசிய பொருள்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இது குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை. தேர்தல் வாக்குறுதியின் போது ஆறு சிலிண்டர் தருவதாக கூறினார் ஆனால் அதை இன்று வரை வழங்கவில்லை. படித்த பட்டதாரிகளுக்கு நான்காயிரம் ரூபாய் தருவதாக கூறினார் ஆனால் அதையும் வழங்கவில்லை. இப்படி அவரின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை கூறிக் கொண்டே செல்லலாம். இப்படி ஒரு பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை நம்ப வைத்து ரிலீஸ் மூலம் ஆட்சிக்கு வந்ததுதான் இந்த மைனாரட்டி த.வெ.க அரசு, ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தேர்தல் அறிக்கையில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் வங்கி கணக்கிலும் பத்தாயிரம் ரூபாய் வழங்கபடும் என தெரிவித்தார் மேலும் மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாய் வழங்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார். இது அனைத்தும் இன்று அதிமுக ஆட்சி அமைத்திருந்தால் அனைத்து மக்களுக்கும் உடனடியாக கிடைத்திருக்கும். என்றும் மக்களுடன், மக்களாக இருந்து மக்களின் அடிப்படைத் தேவைகளை புரிந்து அதற்கான திட்டங்களை செய்வது அதிமுக மட்டும். கடந்த கால திமுக ஆட்சியிலும் தமிழக மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் விடியா திமுக அரசு தமிழக மக்களை வஞ்சித்தது தற்போது உள்ள இந்த ரீல்ஸ் ஆட்சியும் மக்களை வஞ்சித்து வருகிறது.ஆனால் கடந்த கால எடப்பாடி கே.பழனிச்சாமி ஆட்சி காலத்தில் கொரோனா காலத்திலும் அரசுக்கு வருவாய் வர வாய்ப்பு இல்லாத சூழ்நிலையிலும்
மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியவர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள், ஆனால் இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழக மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை இன்று மீளவட்டான் பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை வரக்கூடாது என்று இப்பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.இது குறித்து இந்த அரசுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை. இதுவரை இந்த அரசை சார்ந்த ஒரு அமைச்சரோ, அதிகாரிகளோ இன்று வரை இந்த பகுதி மக்களை நேரில் சந்தித்து இது குறித்து எதுவும் பேசவில்லை. இதுதான் இந்த ஆட்சியின் நிலைமை , ஆட்சிக்கு வந்தவுடன் இந்த ரீல்ஸ் முதல்வர் 717 அரசு மதுபான கடைகளை மூடியதாக கூறி வருகிறார். பிறகு எதற்கு இந்த பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை திறக்கப்படுகிறது. இது இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் புதிதாக அரசு மதுபான கடையை இந்த த.வெ.க அரசு மறைமுகமாக திறந்து வருகிறது. இப்படி வாக்களித்த மக்களை ஏமாற்றி ஒரு அவலமான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது, இதனை மக்கள் முறியடிக்க வேண்டும் மீண்டும் இந்த ரீல்ஸ் ஆட்சியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்.மக்களுக்காக யார் உழைக்கிறார்களோ அவர்களுக்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இந்தப் பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை அமைக்க கூடாது என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீளவிட்டான் மற்றும் சுற்று வட்டார பகுதி கிராம மக்களின் இந்த தொடர் போராட்டத்திற்கு அதிமுக என்றும் உறுதுணையாக நிற்கும் என கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் பேசினார்.