தூத்துக்குடி மாநகராட்சி 7வது வார்டுக்குட்பட்ட திருவள்ளுவர் புரம் பகுதியில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு திடீரென்று தீப்பிடித்தது. இதில் ஏழு வீடுகள் முழுவதும் தீயில் எரிந்தது. வீட்டிலிருந்த வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் துணிகள் சமையல் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து வாழ்வாதாரம் இன்றி தெருவில் ஏழு குடும்பங்கள் அவஸ்தைப்பட்டு வந்தது. தமிழக அரசு இது தொடர்பாக எந்த ஒரு நிவாரணமும் பொருட்களும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் தீவிபத்து மூலம் எரிந்த ஏழு வீட்டின் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது வீட்டில் எந்த ஒரு பொருட்களும் இல்லை என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமியிடம் சில தினங்களுக்கு முன்பு நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர் அப்போது பாதிக்கப்பட்ட மக்களிடம் என்னால் முடிந்த உதவி கண்டிப்பாக உங்களுக்கு செய்வேன் என்று உறுதியளித்தார்.
அதன்படி வீட்டிற்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களான பீரோல். கட்டில். சீலிங் ஃபேன். கேஸ் அடுப்பு. தண்ணீர் பிடித்து வைக்கும் ட்ரம் உள்ளிட்ட வீட்டுக்கு தேவையான பொருட்களை தனது சொந்த செலவில் 7 குடும்பத்திற்கும் பாதிக்கப்பட்ட ஏழு குடும்பத்தினரும் நேரில் சந்தித்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீட்டுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களை வழங்கினார். அப்போது அந்த குடும்பத்தினர்கள் என்றும் உங்களை நாங்கள் மறக்க மாட்டோம். யாரும் எந்த உதவி வழங்கும் முன் வராத நிலையில் மாநகராட்சி மேயரான நீங்கள் எங்களுக்கு வழங்கியது மிகவும் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நன்றி தெரிவித்தனர்.
இதுவரை தீப்பிடித்து எறிந்த ஏழு குடும்பத்துக்கும் எந்த ஒரு அரசியல் கட்சியினரும் எந்த ஒரு உதவியும் வழங்க முன் வராத நிலையில் வீட்டு உபயோக பொருட்களை மேயா் ஜெகன் பொியசாமி தனது சொந்த செலவில் தீப்பிடித்து எறிந்த ஏழு குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் மண்டல தலைவர் நிர்மல்ராஜ், லூா்த்தம்மாள்புரம் பங்கு தந்தை செல்வன், மாநகர மீனவா் அணி துணை அமைப்பாளா் ஜெனிபா் ராபா்ட், பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளா் எமல்டன், வட்டப்பிரதிநிதி கிளமெண்ட், நிா்வாகிகள் ேவணி சந்தானம், தெய்வேந்திரன், அருள்ராஜ், தினேஷ், ஸ்நோசன், ஜெஸ்வந்த், கோகுல், சந்தனகுமாா், ஜெப்சன்,போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் உள்பட பலா் கலந்து கொண்டனர்