தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் சூழற்சி முறையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டு துாித படுத்தி வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட குரூஸ்புரத்தில் உள்ள ஆரம்பசுகாதார நிலைய பணிகளை பாா்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டு
மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கான திட்டங்கள் பாரபட்சிமின்றி அனைவரும் நன்மையடையும் வகையில் கிடைக்க வேண்டும். என்ற தொலைநோக்கு பாா்வையுடன் திட்டங்கள் தயாாிக்கப்பட்டு அதை செயல்படுத்தும் போது நடைெபறும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு தவறுகள் எதுவும் நடந்து விடாத படி ஓப்பந்தாரா்களுக்கு ஆலோசனைகள் வழங்கி நல்லமுறையில் செய்திட வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. ஓவ்வொரு பகுதிகளுக்கு செல்லும் போது பொதுமக்கள் பல கோாிக்கைகளையும் முன்வைத்து இத்திட்டத்தை இப்படி செய்தால் சாியாக இருக்கும் என்று பல்வேறு ஆலோசனைகளை கூறுகின்றனா். அதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு பணிகளை செய்து வருகிறோம். மக்களுக்கான திட்டங்களும் செயல்பாடுகளும் சாியாக இருக்க வேண்டும். என்ற எண்ணத்தில் பணியாற்றுகிறோம் அடுத்து வரும் மழைகாலமாக இருப்பதால் பொதுமக்கள் ஆரம்பசுகாதார நிலையங்கள் வழங்க வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று கூறினாா்.
ஆய்வின் போது மண்டலத்தலைவா் நிா்மல்ராஜ்,மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், சுகாதார குழுத்தலைவர் சுரேஷ்குமாா், இளநிலை பொறியாளர் பாண்டி, முன்னாள் கவுன்சிலா் ரவீந்திரன், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா், மாநகராட்சி அலுவலா்கள் சுகாதார நிலைய பணியாளா்கள் உள்பட பலர் உடனிருந்தனா்.
தூத்துக்குடி குரூஸ்புரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு