தூத்துக்குடி தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாநகராட்சி வடக்கு மண்டலம் திரேஸ்புரம் பகுதியில் மாநகர நல அலுவலர் சரோஜா மற்றும் சுகாதார அலுவலர் ராஜசேகரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் கோபிநாத், சரவணக்குமார், ப்ரியங்கா, கரன்சிங்குமார், கண்ணன் ஆகியோர் கொண்ட குழு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்வது அறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில் வீட்டில் பதுக்கி கடையில் விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டு, வடபாகம் காவல் துறை அதிகாரிகள் உதவியுடன் 45 கிலோ 1.57 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
உடன் வட பாகம் காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் உத்தரவின் பேரில் தலைமைக் காவலர்கள் ராமசாமி, பெருமாள், ப்ரோஸஸ் ஆகியோர் பாதுகாப்பு அளித்து புகையிலைப் பொருட்களை மீட்டனர்.
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட 1.57 லட்சம் புகையிலை பறிமுதல் மாநகராட்சி நடவடிக்கை!!!