தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் ஆவனி மாத தேய்பிறை பஞ்சமி பூஜையை யொட்டி ஸ்ரீவாராஹிஅம்மனுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், உள்ளிட்ட அபிஷேகமும், தொடர்ந்து, ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாயாகம் சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.
பூஜையில் உலகில் அன்பு, அமைதி நிலவவேண்டியும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்திடவும், பக்தர்கள் வாழ்வில் செல்வவளம் பெருகி கொழித் திட வேண்டி ஸ்ரீவாராஹிஅம்மனுக்கு மஹா யாக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
அதனை தொடா்ந்து மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை சித்தா் பீட வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.