தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டில் கே.டி.சி. நகரில் தமிழக அரசு கூட்டுறவுத்துறை ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் இருந்தது. இதனால் மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு சிரமம் ஏற்பட்டது. ஆர்.எஸ்.பி.ஆர். நகர், முல்லைநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள மக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று கே.டி.சி. நகர் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலையில், தங்கள் பகுதியில் ஒரு ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆர்.எஸ்.பி.ஆர். நகரில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், முன்னாள் ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டது. புதிய கடை கட்டியும் பயன்பாட்டுக்கு வராத நிலையில் உடனே ரேஷன் கடையை திறக்கக் கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு வார்டு மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை. இதனால் கொதிப்படைந்த மக்கள் புதிய ரேஷன் கடையை திறக்கக் கோரி போராட்டத்துக்கு ஆயத்தமானார்கள்.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு கவுன்சிலரும் மாநகராட்சி கணக்கு குழு தலைவருமான ரெங்கசாமி புதிய ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து. ெபாதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அந்தோணிராஜ், சண்முகையா, குமாரசாமி, பால்ராஜ், பாலசுப்பிரமணியன், சண்முகவேல், ஜவகர், நூர்தீன் உள்பட பலா் கலந்து கொண்டனர்.