தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு. பழைய காயல். புல்லா வெளி. உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் கப்பல் கட்டு தளம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கோரப்பட்டு அதற்கான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது
இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் உப்பு உற்பத்தியாளர்கள் இந்தப் பகுதியில் கப்பல் கட்டு தளம் அமைக்கப்பட வேண்டாம் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு தமிழகத்தின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றார்.
இந்நிலையில் முள்ளக்காடு சங்கத்தில் சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்கத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னா் தலைவா் மந்திரமூர்த்தி செயலாளர் சேகா் பொருளாளா் பொன்ராஜ், உபதலைவா் ராஜபாண்டியன், உள்ளிட்டோா் கூட்டாக அளித்த பேட்டியில்
சில வாரங்களுக்கு முன்பு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் உப்பளப் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு சென்றுள்ள நிலையில் தமிழக முதலமைச்சா் விஜய் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று கூறி சென்றுள்ளாா். இதனையடுத்து உட்பு உற்பத்தியாளா் சங்க நிர்வாகிகள் சென்னையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவை சந்தித்து எங்கள் பகுதியில் கப்பல் கட்டு தளம் அமைக்கப்பட வேண்டாம் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வேறு பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது அங்கு அமைக்க வேண்டும் என்று தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதனையடுத்து அமைச்சர் கீர்த்தனா நான் நேரில் வந்து பார்வையிட்டு அதன் பின் என்ன முடிவு என்று சொல்கிறேன் என்று கூறியுள்ளாா். ஆனால் இன்று வரை அமைச்சர் கீர்த்தனா எங்களது பகுதியில் உள்ள உப்பளத்தை பார்வையிட வரவில்லை.
இந்நிலையில் தமிழக முதலமைச்சா் விஜய்யை வரும் வாரத்தில் சென்னையில் சந்தித்து எங்கள் பகுதியில் கப்பல் கட்டுத்தளம் வேண்டாம் என்று கோரிக்கை வைக்க உள்ளோம் எத்தனை நாட்கள் ஆனாலும் அங்கு இருந்து தமிழக முதலமைச்சரை சந்தித்து எங்கள் கோரிக்கையை நேரில் வழங்குவோம் அப்படி தமிழக முதலமைச்சரை சந்திக்க முடியவில்லை என்றால் உப்பு உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் அதனை சார்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஓன்று சேர்ந்து மிகப்பெரிய போராட்டம் தூத்துக்குடியில் நடத்தப்படும் என்று கூட்டாக கூறினாா்கள்.