தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து சுகாதார அலுவலர் தலைமையில் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது கருத்தப்பாலம் அருகே உதயா ஏஜென்சி மற்றும் எட்டையபுரம் மெயின் ரோட்டில் உள்ள அபி எசன்ஸ் உள்ளிட்ட மொத்த விற்பனை கடைகளிலிருந்து 230 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாரம் ஆய்வில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 260.25 கிலோ விதிக்கப்பட்ட அபராதம் ரூபாய் 16600 என்பது குறிப்பிடதக்கது. இதே போல் முத்தையாபுரம் பகுதியில் 72 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ 5000 அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் 230 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது