தூத்துக்குடி மாநகரின் பிரதான ஓடையான பக்கிள்ஓடை ரூ 53 கோடி மதிப்பில் எப்சிஐ குடோன் முன்பிருந்து திரேஸ்புரம் வரை சுமாா் 7 கி.மீ தூரத்திற்கு 6 மீட்டா் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குரூஸ்புரம் பகுதியில் நடைபெற்று வரும் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணியினை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு செய்து கூறுகையில் தூத்துக்குடி மாநகர மக்களை மழை வௌ்ள நேரத்தில் பாதுகாப்பதில் பக்கிள் ஓடை முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த 2022ல் ஆண்டு டிசம்பா் மாதம் பெய்தமழை வெள்ளத்தில் மாநகரம் பொிதும் பாதிக்கப்பட்டது. பக்கிள் ஓடை இருந்ததால் பெரும்பாலான வௌ்ளநீர் இந்த ஓடை வழியாக கடலுக்கு சென்றதால் அண்ணாநகா் அசோக்நகா் ஆசிாியா் காலணி மில்லா்புரம் போன்ற பகுதிகள் பெரும் பாதிப்பில் இருந்து தப்பியது பக்கிள் ஓடை அகலப்படுத்தும் போது கூடுதலாக வௌ்ளநீா் வேகமாக வௌியேறும் என்பதால் பல்வேறு ஆய்விற்கு பின்பு அதனை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது ரூ53கோடி மதிப்பில் ஏழரை கிேலாமீட்டா் தூரம் உள்ள பக்கிள் ஓடை 6 கிலோ மீட்டா் அளவிற்கு அகலப்படுத்தப்படுகிறது. ஓடையை ஓட்டியுள்ள மின் கம்பங்கள் அகற்றுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதால் ஓரு வருடத்திற்குள் இந்த பணிகள் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த அகலப்படுத்தும் பணியால் ஏற்கனவே ஓடையில் தண்ணீர் செல்வதில் எந்த தடையும் இருக்காது என்றாா்.
ஆய்வின் போது மாநகராட்சி உதவி பொறியாளா் ராஜேஷ்கண்ணா, பகுதி செயலாளர் சுரேஷ்குமாா் போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், உள்பட பலா் உடனிருந்தனா்.