தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி, மாநகர் மாவட்ட தலைவர் சகாயராஜ், ஆகியோா் கூட்டாக வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மாநகராட்சி பகுதியில் உள்ள தனசேகர் நகரில் மதுபான கடை மற்றும் பார் ஆகியவை நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது ஆகையால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகிறார்கள் மதுபிரியர்கள் குடித்துவிட்டு ரோட்டில் படுத்து உருளுவது வாந்தி எடுப்பது மற்றும் பொதுவெளியில் வைத்து குடிப்பது என இருக்கிறார்கள் காவல்துறையினர் இதை கண்டு கொள்வதில்லை மாவட்ட நிர்வாகமும் இதை கண்டு கொள்வதில்லை அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதை ஒரு போராட்டமாக முன்னெடுக்க முடிவெடுத்துள்ளார்கள் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தனியாக வெளியே வர அச்சப்படுகிறார்கள் குழந்தைகள் டியூசன் செல்ல முடியாத நிலை உள்ளது இதை மாவட்ட நிர்வாகம் சரி செய்யவில்லை என்றால் காங்கிரஸ் கட்சி துணை நின்று போராட்டத்தை முன்னெடுக்கும் மக்களின் நலன் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் மந்திரமாகும் தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் சகாயராஜ், வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி ஆகியோா் தலைமையில் நிச்சயமாக கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனா்.
தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு