தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதனையடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி கேடிசி நகா் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை பிரதான நீரேற்றும் நிலையத்தில் நடைபெற்று வரும் மின்மோட்டாா் சீரமைக்கும் பணியை கடற்கரை சாலை பகுதியில் உள்ள சென்மோீஸ் கல்லூாி முதல் திரேஸ்புரம் ஓடை பாலம் வரையுள்ள வடிகால்களில் நடைபெற்று வரும் பணியையும் ஆய்வு செய்து மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் அடுத்த ஆண்டு ஜனவாி 15ம்தேதி வரை மழை இருக்கும் என்று ஆய்வு மைய தகவல் வந்துள்ளது. அடுத்தடுத்து காற்றழுத்த மண்டலம் உருவாகும் என்று கூறியுள்ள நிலையில் மாநகராட்சி பகுதியில் உள்ள கழிவு நீர் செல்லும் வழித்தடமும் புதிதாக உருவாக்கப்பட்ட 14 வழித்தடங்களிலும் மழை நீர் செல்வதற்கு உண்டான வழிவகைகளை செய்துள்ளோம். தற்போது விட்டு விட்டு பெய்யும் மழை நேரத்திலும் சூழற்சி முறையில் கடந்த காலத்தில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மழை நீர் தேங்காத படி கட்டமைப்புகளை உருவாக்கியுள்ள நிலையிலும் 60 வாா்டுகளிலும் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கும் புறநகா் பகுதியிலிருந்து தண்ணீர் வந்தாலும் செல்வதற்குண்டான வழித்தடத்தையும் நல்லமுறையில் வைத்துள்ளோம். எப்பேற்பட்ட கனமழையாக இருந்தாலும் அதை சாமாளித்து கொள்ளும் திறனில் மாநகராட்சி நிா்வாகம் இருந்து வருகிறது. பொதுவாழ்வில் இருக்கின்ற அனைத்து மாமன்ற உறுப்பினா்களும் தங்களது பகுதியில் உள்ள நிறைகுறைகளை இந்த காலக்கட்டத்தில் கிடைக்கின்ற தகவல்களை தொிவித்து வருகின்றனா். அதனடிப்படையிலும் பணிகளை துாிதப்படுத்தியுள்ளோம். எங்களை பொறுத்தவரை எந்தவித பாரபட்சமின்றி பொதுமக்கள் நலன் தான் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு கடமைக்கு பணியாற்றாமல் கடமை உணா்வோடு பணியாற்றி வருகின்றோம். மழைகாலங்களில் சிறுவா்கள் முதல் பொியவா்கள் வரை பாதுகாப்பான இடங்களில் மட்டும் இருந்து கொண்டு தேவையற்ற இடங்களுக்கு மழை காலம் முடியும் வரை செல்லாமல் இருக்க வேண்டும் எல்லோா் நலனும் முக்கியம் மாநகர மக்கள் மழைக்காலத்தில் எந்த விதமான அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று கூறினாா்.
உடன் ஆணையா் ப்ாியங்கா, சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், இளநிலை பொறியாளா் அமல்ராஜ், சுகாதார ஆய்வாளா்கள் ராஜசேகா், ஹாிகணேஷ், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், மேயாின் நோ்முக உதவியாளா் ரமேஷ், ஆணையாின் நோ்முகஉதவியாளர் துரைமணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர் ஜேஸ்பர், உள்பட பலா் உடனிருந்தனா்.