தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் சில இடங்களில் தெருக்களில் உள்ள கழிவுநீர் செல்லும் வடிகால்கள் கேரி பை பிளாஸ்டிக் கப் பிளாஸ்டிக் பாட்டில் ஆகியவற்றால் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் செல்லாமல் தேங்கி இருந்தது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட பல தெருக்களில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெருக்களில் செல்லும் கழிவுநீர் வடிகாலில் சரியான முறையில் வடிகாலில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றாமல் இருந்தது இந்நிலையில் கனமழை பெய்தது அடுத்து மழை நீர் கழிவுநீர் வடிகாலில் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டு தேங்கி இருந்தது இதனை பார்த்த ஐந்தாவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் அந்தோணி பிரகாஷ் மார்ஷலின் உடனடியாக கொட்டும் மழையில் தெருக்களில் உள்ள கழிவு நீர் வடிகாலில் தேங்கியிருந்த குப்பைகளை தன்னுடைய இரண்டு கைகளால் கழிவுநீர் வடிகாலில் தேங்கி இருந்த குப்பைகளை அகற்றினார் இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் பரபரப்பாக பார்வையிட்டனர் இது பற்றி திமுக மாமன்ற உறுப்பினர் அந்தோணி பிரகாஷ் மார்ஷலின் கேட்டபோது மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் பலமுறை இது பற்றி கழிவுநீர் வடிகாலில் குப்பைகள் தேங்கியுள்ளது அகற்ற வேண்டும் என்று கூறினேன் மாநகராட்சி அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்தவுடன் மாநகராட்சி அதிகாரிகள் எந்த ஒரு பணிகளை சொன்னாலும் செய்வது கிடையாது இதனால் எனது வார்டில் மழை நீர் தேங்கக் கூடாது கழிவுநீர் வடிகாலில் மழைநீர் சீராக செல்ல வேண்டும் என்பதால் பல இடங்களில் குப்பைகள் கேரிபை தேங்கி இருந்தது மக்கள் பணி செய்வதற்காகவே மக்கள் என்னை தேர்ந்தெடுத்தார்கள் அதனால் உடனடியாக நான் கழிவு நீர் வடிகாலுக்குள் இறங்கி கழிவுநீர் வடிகால் தேங்கி இருந்த குப்பைகளை அப்புறப்படுத்தினேன் என மாமன்ற உறுப்பினர் அந்தோணி பிரகாஷ் மார்ஷலின் கூறினார்.
தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை. திமுக மாமன்ற உறுப்பினர் கழிவுநீர் வடிகாலில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் நிலைமை