தூத்துக்குடி நகராட்சியாக இருந்த பகுதியில் கடந்த 2008ல் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞா் ஆட்சியில் அப்போது உள்ளாட்சி துறைஅமைச்சராக இருந்த ஸ்டாலின் முன்னிலையில் 10வது மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பின்பு அதிமுக ஆட்சி அமைந்தபின் 10 ஆண்டுகளாக சாியான பணிகள் நடைபெறாத காரணத்தால் பொதுமக்களின் கோாிக்கை நிறைவேறாமல் இருந்தது. 2021ல் திமுக ஆட்சி அமைந்தபின் உள்ளாட்சி துறையின் கீழ் மக்கள் பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனா் அதனடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயராக பொறுப்பேற்ற ஜெகன் பொியசாமி மாநகராட்சி பகுதி முழுவதும் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான முக.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வாா்டுகளிலும் நடைபெறும் பணிகளை சூழற்சி முறையில் பாா்வையிட்டு போா்காலஅடிப்படையில் பணிகளை முடிக்க வேண்டும் என்றுஓப்பந்த தாரா்களுக்கு அறிவுரை வழங்கி வரும் நிலையில் பொதுமக்களின் கோாிக்கையேற்று
போல்டன்புரம் 1வது தெரு தொடர்ச்சியில் எட்டு வருடங்களுக்கு முன்பு அங்கு இருந்த கழிப்பறையை அகற்றிவிட்டு அப்பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்நோக்கு கூட்ட அரங்கம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த இரண்டு மாதத்திலேயே கொரோனா பரவியதையடுத்து பல்நோக்கு கூட்ட அரங்கம் தூய்மை பணியாளர்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. கொரோனா முடிந்த பின்பும் மீண்டும் அது மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் மாநகராட்சி சுகாதார மைய அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்து வந்தனர் ஆனால் அதனை எந்த ஒரு அதிகாரியும் கண்டு கொள்ளாத நிலை இருந்தது இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மீண்டும் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமியை நேரில் சந்தித்து போல்டன்புரம் ஒன்னாவது தெரு தொடர்ச்சியில் உள்ள பல்நோக்கு கூட்ட அரங்கம் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து அப்பகுதி பொதுமக்களிடம் நான் நேரில் வந்து பார்வையிட்டு சொல்கிறேன் என்று மேயர் ஜெகன் பொியசாமி உறுதியளித்தார் அதன்படி அதிகாரிகளுடன் சென்று பல்நோக்கு கூட்டஅரங்கத்தை பார்வையிட்டார். உடனடியாக அதிகாரிகளிடமும் ஒப்பந்ததாரர்களிடமும் பணிகளை விரைவாக செய்ய வேண்டும் மின்விளக்கு மின்விசிறி உடனடியாக பொருத்த வேண்டும் அதுபோல் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டு சரி செய்யப்பட வேண்டும். மற்றும் பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளப்பட்டு இரண்டு தினங்களில் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் பொியசாமி உத்தரவிட்டார். உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு வந்தனர் பொதுமக்களிடம் மேயர் ஜெகன் பொியசாமி இரண்டு மூன்று தினங்களில் பணிகள் முழுவதும் முடிக்கப்படும் அதன் பிறகு கண்டிப்பாக பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்தக் கூட்ட அரங்கம் செயல்படும். என்று அப்பகுதி பொதுமக்களிடம் மேயர் ஜெகன் பொியசாமி உறுதியளித்தார் அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆறு வருட காலமாக இது மக்களின் பயன்பாட்டிற்கு இல்லாமல் இருந்தது பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம் எங்கள் கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது பொதுமக்களாகிய நாங்கள் சந்தித்து கோரிக்கை வைத்தோம் உடனடியாக நேரில் வந்து பார்வையிட்டு பணிகளை செய்ய உத்தரவிட்டுள்ளீர்கள் மிக்க நன்றி என்று பொதுமக்கள் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று உறுதியளித்தனர்.
அப்போது மேயர் ஜெகன் பொியசாமி பொதுமக்களிடம் கூறுகையில் இது எனது கடமை முன்னாள் முதலமைச்சரும் திமுகதலைவருமான ஸ்டாலின் எனக்கு கொடுத்த வாய்ப்பை நான் அதனை பொதுமக்களுக்கு சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் மக்களின் கோரிக்கை நிறைவேற்றுவது தான் எனது முதல் பணி அதனைத்தான் நான் செய்கிறேன் என்று பொதுமக்களிடம் மேயர் ஜெகன் கூறினார்.
ஆய்வின் போது உதவி செயற்பொறியாளா் லெனின், முன்னாள் கவுன்சிலா் ரவீந்திரன், பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா், மாநகராட்சி அலுவலா்கள் பொதுமக்கள் உடனிருந்தனா்.