தூத்துக்குடி மாநகராட்சியில் அமைந்துள்ள தனசேகரன்நகரில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் கடை மற்றும் பாா் காரணமாக பொதுமக்கள் சிறு பெண் குழந்தைகள் வேலைக்கு செல்லும் பெண்கள் தாய்மார்கள் யாரும் அந்த பக்கம் நடந்து கூட போக முடியாத அவல நிலை உள்ளது இதை பலமுறை காவல்துறை மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை இதனால் பொதுமக்கள் பகலிலும் சரி இரவிலும் சரி வெளியே நடமாட மிகுந்த அச்சத்துடன் காணப்படுகிறார்கள் குடி மக்கள் இப்பொழுது பொதுவெளியில் வெட்ட வெளியில் அமர்ந்து குடித்து கும்மாளம் கொண்டிருக்கிறார்கள் இதனால் பல சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் எழுந்து வருகிறது இதை பலமுறை முறையிட்டும் பயனில்லாத காரணத்தினால் இந்த பகுதி மக்கள் அனைவரும் சேர்ந்து கூடிய விரைவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் இருப்பதற்கு முடிவெடுத்துள்ளார்கள் பட்டப் பகலிலே யாருக்கும் அஞ்சாமல் இப்படி உட்கார்ந்து பகிரங்கமாக குடிக்கும் மக்களை கண்டிக்க ஆளில்லாத காரணமாக இருக்கிறது. தனசேகர நகரை சுற்றி பல தரப்பட்ட வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் ஆண்கள் வாழ்கின்றனர் இது ஒரு முக்கியமான இடமாக இருக்கிறது ஆனால் இரவு ஆறு மணிக்கு மேலே எந்த பாதுகாப்பும் இல்லாத இடமாக இருக்கிறது இந்த இடத்தை சுற்றி அமர்ந்து பொதுவெளியில் குடிக்கின்ற மக்கள் அதனால் அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனா்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் உடனடியாக தலையிட்டு பொது இடங்களில் மது அருந்துவோா் மீதுஉாிய நடவடிக்கை எடுப்பதுடன் பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென கோாிக்கை விடுத்துள்ளனா். விரைவில் தீர்்வு காணப்படாவிட்டால் பொதுமக்கள் ஓன்றிணைந்து மிகப்பொிய அளவில் ஆா்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொிவித்துள்ளனா்.