
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய மாணவரணி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தூத்துக்குடி வடக்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் -அ. ஆரோக்கிய செல்வ ஸ்டாலின்,
துணை அமைப்பாளர்கள் – செ.கார்த்திக், கா.பாலசுப்பிரமணியன், ச. நவீன் குமார் ரா. மாரிச்செல்வன்
க.கற்பகவள்ளி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேற்படி நியமிக்கப்பட்ட அனைத்து புதிய நிர்வாகிகளும்
ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா தலைமையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
திமுக மாணவரணி ஒன்றிய அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்களை அரியணையில் அமர்த்துவோம் என்ற உறுதிமொழியை நாம் ஏற்றுக் கொண்டு இப்போதிலிருந்து தேர்தல் பணியை துவங்கி விட வேண்டும் என உள்ளிட்ட பல முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வாழ்த்துகள் பெற்றார். இந்த நிகழ்ச்சியின் போது ஓட்டப்பிடாரம் மனக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் இளைஞர் அணியினர் உள்ளிட்டோர் ஏராளமானோர் உடன் இருந்தனர்.