தமிழ்நாட்டில் நேற்று முதன் முறையாக காவலர் நாள் கொண்டாடப்பட்டது. தமிழக முதல்-அமைச்சர் கடந்த 29.4.2025 அன்று நடைபெற்ற 2025-2026-க்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் முதன் முதலாக 1859-ம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6-ம் நாள் இனி ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ம் நாள் காவலர் நாளாகக் கொண்டாடப்படும் என அறிவித்து அரசாணை எண்.314 உள் (காவல்.8) துறை நாள்.24.6.2025-னை வெளியிட்டார். முதல் காவலர் நாள் கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில், அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதிமொழி ஏற்பு, இன்னுயிர் நீத்த காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்துதல், காவல்துறையின் செயல்பாடுகளை பொதுமக்களிடம் கொண்டு செல்வது, காவல் குடும்பங்கள் மற்றும் சமூகத்தை உள்ளடக்கிய கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமையகம், சென்னையில் தமிழ்நாடு காவல்துறையின் வரலாறு குறித்த சிறப்புத் திரையிடலுடன் கொண்டாட்டங்கள் தொடங்கின. 2023-ம் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, தமிழ்நாடு காவல்துறையின் ஒவ்வொரு மாவட்டம்/ நகரம்/ பெருநகர சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 46 சிறந்த காவல் நிலையங்களின் காவல் நிலைய அதிகாரிகளுக்கு, தமிழக டிஜிபி (பொறுப்பு) வெங்கட்ராமன் தமிழக முதல்-அமைச்சரின் விருதுகளை வழங்கினார். அதன்படி 2023 ஆம் ஆண்டின் சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருதினை முன்னீர் பள்ளம் காவல் நிலையம் பெற்றது.இந்த விருதினை தற்போது முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளராக இருக்கும் வேல்ராஜ் அவர்கள் பெற்றுக் கொண்டார். இந்த முதலமைச்சரின் சிறப்பு விருது தமிழ்நாடு காவல்துறை டிஜிபி வெங்கட்ராமன் அவர்களின் திருக்கரங்களால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம், ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோர் உடன் இருந்தனர். காவல் ஆய்வாளர் வேல்ராஜ் சென்ற இடமெல்லாம் சிறப்பாக செயல்படுபவர் என்ற ஒரு சிறப்புமிக்க பெயரை பெற்றவர் இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் வடபாகம், தென்பாகம், காவல் நிலையங்களிலும் உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையங்களிலும் சிறப்பாக பணியாற்றியவர். இவர் பணியாற்றிய காவல் நிலையங்களில் சக காவலர்களை அன்போடு வேலை வாங்கக் கூடியவர் அது மட்டுமல்லாமல் காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசக்கூடியவர் அதே நேரத்தில் சமூக விரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கி வந்தார். இதனால் அனைத்து தரப்பினர் மத்தியிலும் நற்பெயர் எடுத்து வந்தார். காவல் ஆய்வாளர் வேல்ராஜ் பணியாற்றிய காவல் நிலையத்தில் இருந்து இடமாற்றம் செய்யும் பொழுது பொதுமக்கள் வியாபாரிகள், அனைவரையும் ஆய்வாளர் இன்னும் இரண்டு வருடம் எங்கள் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் பணியமர்த்த உத்தரவிடுங்கள் என்று உயர் அதிகாரிகளிடம் போய் கோரிக்கை வைத்த நிகழ்வுகளும் உண்டு அந்த அளவிற்கு பொதுமக்கள் வியாபாரிகள் ஆகியோருக்கு உற்ற நண்பனாகவும், சமூக விரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கி வந்ததால் இவர் பணியாற்றி வரும் காவல் நிலையத்திலிருந்து இடம் மாற்றம் செய்தால் கூட பொதுமக்கள் வேதனை படும் சூழ்நிலை இருந்தது. பொது மக்களின் நண்பனாகவும் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்றவரும் காவல் ஆய்வாளர் வேல்ராஜ்க்கு தற்போது உயரிய விருதான முதலமைச்சரின் விருது தமிழக டிஜிபி கரங்களால் வழங்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் சார்பிலும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.காவல் ஆய்வாளர் வேல்ராஜ் மேலும் பல சரித்திர சாதனைகள் படைக்க தின புரட்சி நியூஸ் குழுமம் சார்பில் ராயல் சல்யூட்.
முன்னீர் பள்ளம் காவல் நிலைய ஆய்வாளர் வேல்ராஜ்க்கு முதல்-அமைச்சர் விருது: தமிழக டிஜிபி வெங்கட்ராமன் வழங்கினார்.குவியும் பாராட்டுக்கள்!!!
