தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான அடிப்படை வங்கி விழிப்புணர்வு எஸ்பிஐ வங்கி மூலம் முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை மெர்லின் பாக்கியவதி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதி சார் அறிவுத்திறன் ஆலோசகர் மணிகண்ட வாசகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
மாணவிகளுக்கு வங்கியின் சேவைகள் குறித்தும், நவீன கால இணைய வழி வங்கிப் பயன்பாடுகள் அதின் நன்மைகள், ஆன்லைன் பண மோசடிகளில் இருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, மற்றும் விழிப்புடண் செயல்படுவது பற்றிய எச்சரிக்கைகள் அறிவுறுத்தப்பட்டது. மாணவப் பருவத்திலிருந்தே சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம் சிறந்த நிதி ஒழுக்கத்தை உருவாக்க முடியும் என்பதையும் கற்றுக் கொடுத்தனர்.
நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.