நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் கோாிக்கை
தூத்துக்குடி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் காவல் துறைத் தேர்வுகளின் விளையாட்டு ஒதுக்கீட்டுப் பட்டியலில் தற்காப்புக் கலையைச் சேர்க்கக் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு அளித்துள்ள கோாிக்கை மனுவில் தொிவித்திருப்பதாவது தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டேக்வான்டோ பயிற்சி சிறு குழந்தைகளாக இருக்கும்போதே பயிற்சி எடுத்து பல ஆண்டுகள் ஒழுக்கத்துடன் பயிற்சி செய்து, காயங்களையும் உடல் வலியையும் தாங்கி, கல்வியையும் விளையாட்டையும் இணைத்துக்கொண்டு போட்டிகளில் பங்கேற்கிறார்கள். அவர்களுடன் ஒவ்வொரு பயிற்சிப் பயணத்திலும் பெற்றோர்களும் நேரத்தையும் பணத்தையும் அர்ப்பணிக்கிறார்கள். ஒரு பதக்கம் வெல்லும் நாளில் அந்த மாணவர் மேடையில் பாராட்டப்படுகிறார். ஆனால் அரசுப் பணிக்கான அறிவிப்பைப் பார்க்கும்போது, அவர் பல ஆண்டுகள் பயிற்சி செய்த டேக்வான்டோ என்ற விளையாட்டின் பெயரே தகுதிப் பட்டியலில் இல்லாமல் போகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 மற்றும் 16-ன் படி, தகுதி வாய்ந்த அனைத்து குடிமகன்களுக்கும் அரசு வேலைவாய்ப்புகளில் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஜூடோ, குத்துச்சண்டை போன்ற பிற தற்காப்புக் கலைகளுக்கு வழங்கப்படும் அதே முக்கியத்துவமும், விளையாட்டு ஒதுக்கீட்டு வாய்ப்புகளும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட டேக்வாண்டோ வீரர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் விளையாட்டுப் பயிற்சிக் கொள்கைகளின்படி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விளையாட்டுகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். டேக்வாண்டோ ஒரு முதன்மையான உலகளாவிய ஒலிம்பிக் விளையாட்டாகும். இந்த விளையாட்டு வீரர்களின் அதீத கால் உதையும் திறனும் உடற்திறனும், ஒழுக்கமும் காவல் துறையின் களப் பணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதலமைச்சர் கோப்பை போட்டிகளிலும், மாநில அளவிலான போட்டிகளிலும் பல்லாயிரக்கணக்கான தமிழக கிராமப்புற மாணவர்கள் இதில் பங்கேற்றுப் பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகின்றனர். எனினும், இந்த பட்டியலில் இவ்விளையாட்டு இல்லாததால் மாணவர்களின் சாதனை அரசுப் பணிக்கான தகுதியாகக் கருதப்படாமல் போகிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் காவலர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் பணிகளுக்கான 10சதவீதம் விளையாட்டு ஒதுக்கீட்டுப் பட்டியலில் 16 விளையாட்டுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் ஜூடோ, சிலம்பம், குத்துச்சண்டை போன்ற தற்காப்புக் கலைகள் இடம்பெற்றிருந்தாலும், உலகளவில் புகழ்பெற்ற “டேக்வாண்டோ” விளையாட்டு இதுவரை சேர்க்கப்படவில்லை. இது தற்காப்புக் கலை பயிலும் மாணவர்களிடையே பெரும் சமத்துவமின்மையை உருவாக்கியுள்ளது.
ஆகவே பட்டியலில் சேர்க்க உரிய விதி அல்லது அரசாணைத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். 3 சதவீத சிறந்த விளையாட்டு வீரர் ஒதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்கப்படுகிறார்களா என்பதை எழுத்துப்பூர்வமாகத் தெளிவுபடுத்த வேண்டும். தகுதி இருந்தால், தேவையான போட்டி நிலை, பதக்கத் தகுதி மற்றும் மதிப்பீட்டு முறையை வெளியிட வேண்டும். SGFI, SDAT மற்றும் உரிய அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் நடத்தும் போட்டிகளில் பெற்ற சான்றிதழ்கள் எந்த நிபந்தனைகளின் கீழ் ஏற்கப்படும் என்பதைத் தெளிவாக அறிவிக்க வேண்டும். Form-I, Form-II, Form-III போன்ற சான்றிதழ்களில் எது தேவை, அதை எந்த அமைப்பு வழங்க வேண்டும், போட்டி எந்த நிலையைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்கான ஒரே மாதிரியான வழிகாட்டுதலை வெளியிட வேண்டும். டேக்வான்டோ -வை ஒதுக்கீட்டுப் பட்டியலில் சேர்க்க முடியாது எனக் கருதினால், அதற்கான சட்ட விதி, நிர்வாகக் காரணம் மற்றும் அங்கீகாரம் பெற வேண்டிய நடைமுறையை எழுத்தில் தெரிவிக்க வேண்டும். SSC மற்றும் மத்திய அரசுத் துறைகளில் இந்த வீரர்களுக்குப் பொருந்தும் விளையாட்டு ஒதுக்கீட்டு வேலைவாய்ப்புகள், விண்ணப்ப வழிமுறை, ஏற்கப்படும் போட்டிச் சான்றிதழ்கள் ஆகியவற்றைத் தெளிவாக அறிவிக்க வேண்டும். வேலைவாய்ப்பு விண்ணப்பத்தில் விளையாட்டின் பெயர் இல்லாததால் மதிப்பிழந்து போகக் கூடாது. வீரரின் உழைப்பை அங்கீகரித்து, தகுதியானவர்களுக்கு நியாயமான வேலைவாய்ப்பு வாய்ப்பை வழங்குவது அரசின் பொறுப்பாகும். எனவே, இம்மனுவை அவசரமாகப் பரிசீலித்து, இந்த வீரர்களின் தகுதி மற்றும் வேலைவாய்ப்பு வழிமுறைகள் குறித்த தெளிவான எழுத்துப்பூர்வ பதிலை வழங்கி, அடுத்தடுத்த ஆட்சேர்ப்பு அறிவிப்புகளில் உரிய திருத்தங்களைச் செய்யுமாறு கோாிக்கை மனுவில் தொிவித்துள்ளாா்.