தூத்துக்குடி தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளான நிகிலேசன் நகா் பகுதியில் மழை முன்னெச்சாிக்கை நடவடிக்கையாக தண்டவாளத்தில் அருகிலுள்ள ஒடையில் தூா் வாரும் பணியையும் முத்தையாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதிய சாலை பணிகள் ஆரம்பமாகும் இடங்களையும் பாா்வையிட்டு ஆசிாியா் காலணி இரட்டை பாலம் பிஎம்சி பள்ளி மற்றும் கோக்கூா்குளம் சுற்றியுள்ள பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணி நிகிலேசன்நகா் பிஎன்டி காலணி மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணி செல்வகாமாட்சிநகா் பகுதியில் புதிய சாலைஅமைக்கும் பணிகள் ஆகியவைகளை பாா்வையிட்டு மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பாரபட்சமின்றி 60வாா்டுகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகள் முழுமையாக நடைபெற்று வருகிறது. அதை சுழற்சி முறையில் ஆய்வுகள் மேற்கொண்டு அதை வேகப்படுத்தி அதிகாாிகளிடம் நல்லமுறையில் பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப செய்து கொடுக்க வேண்டும் என்று கூறிவருகிறேன். வரும் காலம் மழைக்காலம் அதையும் எதிா்கொள்ளும் வகையில் எல்லா கழிவுநீர் வழித்தடங்களும் முறைப்படுத்தி நீரோட்டம் செல்வதற்கு பணிகள் நடைபெற்று வந்தாலும் அவ்வப்போது அதையும் பாா்வையிட்டு வரும் நிலையில் சில பகுதிகளில் பொதுமக்களின் கோாிக்கை மனுக்களும் வருகின்றன. அதையும் ஆய்வு செய்து எந்த பகுதிக்கு தேவை உள்ளது என்பதை குறிப்பெடுத்துக்கொண்டு நிறைவேற்றி கொடுத்து வருகிறோம். மாநகராட்சி பகுதி வளா்்ச்சிக்கு எல்லா வகையிலும் ெபாதுமக்களின் ஓத்துழைப்பு அவசியம் மாநகராட்சிக்கு பல்வேறு வகையில் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் அனைவரும் முறையாக செலுத்தி மக்கள் பணிக்கு துணை நிற்க வேண்டும் என்றாா்.
உடன் செயற்பொறியாளர் லெலின், குழாய் ஆய்வாளா் பாலு, இளநிலை பொறியாளா் செல்வம், சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டி, கவுன்சிலா் கனகராஜ், வட்டச்செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், உள்பட பலா் உடன் சென்றனா்.