தூத்துக்குடி மாவட்டம் உட்பட தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மதர் சமூக சேவை நிறுவனம் ஏழை, எளிய, ஆதரவற்ற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின் முன்னேற்றத்திற்காகவும், புயல், சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்க, நிலத்தடி நீரை மேம்படுத்த, நீர் நிலைகளை பாதுகாக்க, மண்ணரிப்பை தடுக்க, மேலும் சுற்றுச்சுழலை பாதுகாக்க, தமிழ்நாட்டிலேயே முதன் முதலில் ஒரு கோடி பனைமர விதைகள் நடும் பணியை தொடங்கி பனையின் பயன்கள் பற்றி அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் விழிப்புணர்வு பெற்று தொடர்ச்சியாக பலரும் புதிய, புதிய அமைப்புகள் உருவாக்கி பனை விதைகள் நடும் பணியை செய்வதற்கு காரண கர்த்தாவாக இருப்பவர் கென்னடி மேலும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு இளைஞர்களுக்கு, குழு பெண்களுக்கு, பொதுமக்களுக்கு பனை பாதுகாப்பு மற்றும் போதை, புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இந்த சேவைகளை அங்கீகரித்து மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடிக்கு மக்கள் மறுமலர்ச்சி தடம் அமைப்பின் சார்பில் விருது வழங்கும் விழா மற்றும் நாம் யார்? என்ற கருத்தரங்கு காயல்பட்டினம் துளிர்கள் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். காயல் முருகேசன், அம்பேத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இசக்கிமுத்து வரவேற்றார். தமிழினியன் நோக்க உரையாற்றினார். மக்கள் மறுமலர்ச்சி தடம் அமைப்பின் நிறுவனர் இராஜவர்தனன். கென்னடிக்கு விருது வழங்கினாா்.
நீதிபதி இராமலிங்கம், முன்னாள் துணைவேந்தர் ஆறுமுகம் மாவட்ட வன அலுவலர இளையராஜா, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பேச்சியம்மாள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன துணை மேலாளர் சிவக்குமார், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கச் மாநில செயலாளர் செல்வகுமார் துணைத் தலைவர் சுதாகர், உட்பட பலா் பாராட்டி வாழ்த்தினாா்கள். முத்துராமன் நன்றி கூறினார்.