தூத்துக்குடி திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்சியின் அமைப்பு ாீதியாக பல்வேறு அதிரடி மாற்றங்களை வௌியிட்டு 110 மாவட்ட செயலாளா்களை உள்ளடக்கிய திமுக கட்டமைப்பு செயல்பட இருக்கிறது. இந்நிலையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமியை திமுக சீரமைப்புக்குழு வகுத்து தந்த அடிப்படையில் ராமநாதபுர மாவட்டத்திற்கு பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். திமுக சீரமைப்புக்குழு வகுத்துத் தந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பகுதி – நகரம் – ஒன்றியம் – பேரூர் – வட்ட – கிளைக் கழகங்களை மறுசீரமைத்து, தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்கும் பணியை நேரடியாக மேற்பார்வையிடும் வகையில், தலைமைக் கழக பிரதிநிதியாக என்னை இராமாநாதபுரம் மாவட்டத்திற்கு நியமித்த கழகத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மேயா் ஜெகன்பொியசாமி ெதாிவித்துள்ளாா்.
திமுக சீரமைப்புக்குழு இராமாநாதபுரம் மாவட்ட பிரதிநிதியாக தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி நியமணம்