Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் அதிகாாிகள் மீது நடவடிக்கை குறித்து முதல்வா் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் மக்கள் சிவில் உரிமைக் கழகம் கோாிக்கை

Last updated: September 3, 2026 10:58 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமைக் கழக சாா்பில் முன்னாள் தேசிய குழு உறுப்பினா் பேராசிாியா் பாத்திமா, தலைவா் செல்வராஜ், செயலாளா் ராஜா, பொருளாளா் சம்சுதீன், ஆகியாோ் கூட்டாக வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது
தமிழ்நாடு கடந்த 2018 மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறையினர் கண்மூடித்தனமாக 13+2 பேரை சுட்டுப் படுகொலை செய்தது நம் அனைவரும் அறிந்ததே. இன்றைய தமிழக முதல்வர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பு தூத்துக்குடி மக்களோடு இந்தத் துயரத்தில் பங்கேற்றார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இரவோடு இரவாக சந்தித்து என்றும் தூத்துக்குடி மக்களோடு இருப்பேன் என்று உறுதி கொடுத்தார். இதையும் நாம் அனைவரும் அறிவோம். தற்போது விஜய் தமிழ்நாடு முதல்வராக வந்து அமர்ந்து 100 நாட்களில் தூத்துக்குடி மக்களின் வேண்டுகோளான அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, உயர்நீதிமன்றத்தில் காவல்துறைக்கு எதிரான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது என்று பதில் கொடுத்துள்ளார். இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் உள்ளது. உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை செய்த ஒரு நபர் ஆணையமான நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களுடைய பரிந்துரையை தமிழக அரசு நிறைவேற்றுமா? அல்லது தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை மிகத் தெளிவாக விளக்க வேண்டும் என்று கோருகிறோம். தற்போது நடந்து வரும் சட்டசபை கூட்டத் தொடரில் வரவிருக்கும் காவல்துறை மானியக் கோரிக்கையில் தூத்துக்குடி மக்களின் எதிர்பார்ப்பான துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் மீதான நடவடிக்கையை உறுதி செய்யும் விதமாக அறிவிப்பு கொடுத்திட வேண்டும். மக்களுக்கான அரசாக மக்களோடு நின்று உயர்நீதிமன்றத்திலும் முறையான குற்ற நடவடிக்கை எடுக்கும் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமைக் கழகம் சார்பாக இவ்வேண்டுகோளை முன்வைக்கின்றோம். மேலும் 2018-ல் நடந்த படுகொலைக்குப் பிறகு தூத்துக்குடி மக்கள் இந்த ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது என்று நிம்மதி அடைந்திருந்தோம். இந்நிலையில் தற்போது தமிழக அரசு செய்துள்ள இந்த இரட்டை நிலைப்பாட்டிற்கு தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் தொிவித்துள்ளனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article திமுக சீரமைப்புக்குழு இராமாநாதபுரம் மாவட்ட பிரதிநிதியாக தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி நியமணம்
Next Article முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி பள்ளி மாணவிகள் கபாடி போட்டியில் மாநில அளவில் சாதனை!!!

By Dinapuratchi
தமிழகம்தூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடியில் ஐஎன்டியூசி பெருமாள்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

கடம்பூர் ராஜூவை புறக்கணிக்கும் அதிமுக நிர்வாகிகள் துாத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுகவில் சலசலப்பு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களையும், கட்சியையும் ஏமாற்றும் நோக்கத்துடன் தூத்துக்குடி அட்வகேட் இருதய குமார் சில தவறான பதிவுகள் மற்றும் அவதூறு செய்திகள் பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காமராஜ் நகர் பகுதியில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டு இடங்கள் இருப்பதை காரணமாக காட்டி திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி, சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயல்படுகிறார் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், ஒயின் ஷாப் நடத்துவதற்கு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வழங்க வேண்டும் என்று பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அந்த தொகையை வழங்க முடியாது என கூறியதன் காரணமாகவே பழிவாங்கும் நோக்கத்துடன் ஒயின் ஷாப்பை மூடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பல்வேறு கட்சிகளில் இருந்தவர் என்பதாலும், சில அரசியல் கட்சிகளின் தூண்டுதலின் பேரில் இரு குழுக்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அந்த கடையை திறக்க வேண்டும் என்று போராடியவரே தற்போது அதற்கு எதிராக செயல்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்திற்கும் விஜய் அவர்களுக்கும் அவதூறு ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருபவர்மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?