தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 9வது வார்டு எஸ்.எஸ்.மாணிக்கபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44ஆம் ஆண்டு திருவிழா. ஜெபமாலையுடன் பொதுமக்கள் முன்னிலையில் வானவேடிக்கையுடன் கொடியேற்றம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தினமும் மாலை ஜெபமாலை, பிரார்த்தனை நடைபெறும். இந்த திருவிழாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஜாதி மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்வார்கள். வருகிற 6ம் தேதி சப்ரபவனியும், 7ம் தேதி ஆசன விருந்தும் நடைபெறும். முக்கிய திருவிழாவானது வருகிற 8ம் தேதி அன்று லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை செல்வன் பெர்னான்டோ தலைமையில் ஆடம்பர திருவிழா கூட்டு திருப்பலி நடைபெறுகிறது. விழா ஏற்பாட்டினை தங்கத்தேர் கெபி கமிட்டி, வேளாங்கண்ணி மாதா அன்பிய மக்கள், பூண்டி மாதா அன்பிய மக்கள் செய்திருந்தனர்.
தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 44ம் ஆண்டு திருவிழா தொடக்கம்