தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு மஹா யாகம் மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் குருமகாலிங்கேஸ்வர் மற்றும் மஹா பிரத்தியங்கிராதேவி அம்பாளுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16வகையான அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, தமிழகத்தில் இந்த ஆண்டு அன்னை அருளால் நல்ல மழை பெய்துள்ள நிலையில் விவசாய சாகுபடிகள் செழிக்கவும், பக்தர்கள் வாழ்வில் கடன், எதிரித்தொல்லைகள் யாவும் நீங்கிடவும், இல்லத்தில் செல்வங்கள் பெருகிடவும், திருமண வரம், குழந்தை பாக்யம் கிடைத்திடவும் வேண்டி யாக வழிபாடுகள் நடந்தது.
யாக வழிபாடுகளை தொடர்ந்து, குருமகாலிங்கேஸ்வரர் மஹா காலபைரவருக்கும், பிரத்தியங்கிராதேவிக்கும் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று வணங்கினர்.