தூத்துக்குடி 5 ஆயிரம் குடும்பங்களை 21 நாளில் வெளியேற்ற துடிக்கும் தவெக அரசுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது திருப்பத்துர் மாவட்டம் ஆம்பூர் பாலாற்று கரையோர குடியிருப்புகளில் 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் நாற்பது ஐந்து ஆண்டுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். திடீரென நகராட்சியிலிருந்து வந்து அனுமதியற்ற ஆக்கிரமிப்பு பொதுநிலம் ஆகவே 21 நாளில் அப்பகுதி மக்களின் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என ஓட்டிய நோட்டீஸால் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களின் குடியிருப்புகளை காலி செய்வதற்கு முன் மாற்று இடங்கள் அல்லது வீடுகள் கொடுக்க பட்டிருக்கிறதா இல்லை ? மேலும். எந்தவித மாற்று ஏற்பாடு செய்யாமல் மக்களின் குடியிருப்புகளை காலி செய்ய வைப்பதனால் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாக மாறி விடும். என்பதை தவெக அரசு மிகவும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே பொது மக்களின் நலனை கருதி அப்பகுதியில் வசிக்கும் மக்களின் குடியிருப்புகளை காலி செய்ய வைப்பதை தவெக அரசு கை விட வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தொிவித்துள்ளாா்.
5 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்ற துடிக்கும் தவெக அரசுக்கு காயல் அப்பாஸ் கண்டனம்