தூத்துக்குடி போதை எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி பள்ளித் தலைமை ஆசிரியை மெர்லின் பாக்கியவதி தலைமையில் பள்ளி மாணவிகள் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்றனர்.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகள், ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி திரையில் ஒளிபரப்பப்பட்டு, மாணவிகள் அனைவரும் இணைந்து போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். போதைப்பொருளின் தீமைகள் குறித்து மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, போதை இல்லா சமூகத்தை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்