தூத்துக்குடி கல்லூரிக்கல்வி ஆணையர் கல்லூரிக்கல்வி இயக்கம் ஆணைக்கிணங்க வ.உ.சிதம்பரம் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்புக் குழு, நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை இராணுவம், மற்றும் கடற்படை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வீரபாகு தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போதைப்பொருள் தடுப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செல்வம் தொகுத்து வழங்கினார்
கல்லூரி முதல்வர் வீரபாகு போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி வாசிக்க சுமார் 850 மாணவ மாணவியர்கள் மற்றும் 60 பேராசிரியர்கள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்கள். கல்லூரி மாணவர்களுக்குப் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போதைப்பொருள் தடுப்புக் குழு உறுப்பினர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், தேசிய மாணவர் படை இராணுவம், மற்றும் கடற்படை அதிகாரிகள், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஒருங்கிணைப்பாளர் ஆகியோா் செய்திருந்தனர்