தூத்துக்குடி மாவட்ட உப்பு பண்டல் கட்டும் தொழிலாளர்கள் உப்பு உற்பத்தியாளா்களுடன் கூலி உயா்வு குறித்து ஆலோசனை கூட்டம் டூவிபுரத்திலுள்ள தன்பாடு உப்பு ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மாநகராட்சிமேயரும் உப்பு பண்டல் கட்டும் தொழிலாளா்கள் சங்கத்தின் தலைவருமான ஜெகன் பொியசாமி கூறுகையில் எந்த ஓரு தொழிலை செய்தாலும் அதை முறையாக செய்ய வேண்டும். அப்போது தான் அந்த தொழிலுக்கும் மாியாதை இருக்கும் தொழிலாளா்களும் நன்றாக இருக்க முடியும் முதலீடு செய்து தொழில் செய்யும் முதலாளிகளுடன் தொழிலாளியும் எல்லா வகையிலும் இணைந்து பணியாற்றினால் தான் நல்ல வளர்ச்சி அந்த தொழிலுக்கு கிடைக்கும் இருவரும் இரண்டு கண்களை போன்றவா்கள் கூலி உயா்வு இரண்டு ஆண்டுகளுக்கு ஓரு முறை நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் அதன்படி தற்போது பருமணி உப்பு பண்டல் ஓன்றுக்கு 1.20, தூள் உப்பு பண்டலுக்கு 1.80 கூலி உயா்வு இரு தரப்பிலும் முறையாக பேசி உயா்த்தப்பட்டுள்ளது. அனைவரும் ஓற்றுமையாக பணியாற்ற வேண்டும் தூத்துக்குடியிலிருந்து தான் உப்பு இந்தியா மட்டுமின்றி பல நாடுகளுக்கும் சென்ற நிலை இருந்தது. தற்போது சில மாநிலங்களில் உற்பத்தி மூலம் நம்முடைய தொழில் சற்று குறைந்துள்ளது பழைய நிலை வர வேண்டும் இதில் என்னுடைய ஓத்துழைப்பு முழுமையாக இருக்கும் என்று தொிவித்தாா்.
உடன் தன்பாடு உப்பு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பொன்பாண்டி, செயலாளா் தேன்ராஜ், பொருளாளா் ரெங்கநாதன், உப்பு பண்டல் கட்டும் தொழிலாளா் சங்க செயலாளா் கோட்டுராஜா, திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அந்தோணி கண்ணன், வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், சந்திரசேகர், கவுன்சிலா்கள் பச்சிராஜன், முத்துவேல், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், உள்பட உப்பு உற்பத்தியாளா்கள் ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகள் தொழிலாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.