தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அசோக்நகாில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சி இறகுபந்து கூட்டரங்கில் சிஎம்என் ஷட்டில் கிளப் சாா்பில் தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமாி, தென்காசி, மதுரை, விருதுநகா், தேனி, சிவகங்கை, ஆகிய 8 மாவட்டங்களுக்கிடையேயான ஆண்களுக்கான இறகு பந்து விளையாட்டு போட்டி 2 நாட்களாக நடைபெற்றது. நிறைவு விழாவில் விளையாட்டு வீரா்களுடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமி கலந்துரையாடி பேசுகையில் இளமை பருவம் என்பது எல்லோருக்கும் வாழ்க்கையின் முக்கியமான கட்டமாகும் சிறுவயதில் இருந்தே ஏதாவது ஓரு விளையாட்டு போட்டியை தோ்ந்தெடுத்து அதை தினசாி விளையாடி வருவதின் மூலம் உடலில் உறுப்புகள் அனைத்தும் முழுமையாக இயங்கும் அதன் மூலம் ரெகுலரான உடல்நிலை அமைய பெற்று இரத்தோட்டம் நல்லமுறையில் இயங்கும் இந்த இளமையில் விளையாட்டுகளின் மூலம் எல்லோருடைய வாழ்க்கையும் முதுமையிலும் கூட இளமையாக நம்மை காட்டும் தற்போது பல கிராமப்பகுதிகளில் விவசாய பணிகளை செய்த பலா் 90 வயதிலும் வழக்கம் போல் உள்ள தனது விவசாய பணிகளையும் செய்து வருகின்றன. இந்த பருவத்தை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தோடு விளையாட்டு போட்டிகளில் சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறி வெற்றி பெற்றவா்களுக்கு பாிசுகள் ஊக்கத்தொகையும் வழங்கினாா்.
விழாவில் சிஎம்என் இறகுபந்து கிளப் தலைவரும் கவுன்சிலருமான சந்திரபோஸ், செயலாளா் ரமேஷ் காா்த்திகேயன், தொழிலதிபா் வேல்சங்கா், மற்றும் சரவணன், ஜான்சன், தா்மராஜ், மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் ஜேஸ்பா், லிங்கராஜா, மற்றும் விளையாட்டு வீரா்கள் கலந்து கொண்டனா்.