தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சகாயராஜ் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழக முன்னாள் முதலமைச்சா் காமராஜாின் 124வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூா் வழிகாட்டுதலின் படி தூத்துக்குடியில் 14வயதுக்கு மேற்பட்ட பள்ளி கல்லூாி மாணவ மாணவியா்கள் மற்றும் பொதுமக்களுக்கான மினி மாராத்தான் போட்டி வரும் 19ம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு பனிமயமாதா கோவில் முன்பு தொடங்கி கேம்ப் 1 ரயில்வே கேட் வரை சென்று 8 கிலோ மீட்டா் தூரம் மீண்டும் பனிமயமாதா கோவில் திரும்புதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவியா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மண்டலத்தலைவா்கள் ஐசன்சில்வா, தொடா்புக்கு 9843245689 நிா்மல்கிறிஸ்டோபா் 7845572345 முன்னாள் இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஸ்டாலின் 9789781619 மாவட்ட துணைத்தலைவா் ராஜாராம் 8124581235 ஆகிய எண்களை தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவா்களுக்கு முதல்பாிசு ரூ25 ஆயிரம் 2ம் பாிசு ரூ20 ஆயிரம் 3ம் பாிசு ரூ 15 ஆயிரம் 4ம் பாிசு ரூ10 ஆயிரம், 5ம் பாிசு ரூ 5 ஆயிரம் அடுத்து வரும் 116 நபா்களுக்கு ரூ 1000 வீதம் வழங்கப்படுகிறது. இந்த சந்தா்பத்தை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு வௌியிட்டுள்ள அறிக்கையில் மாவட்ட தலைவா் சகாயராஜ் கூறியுள்ளாா்.
காமராஜா் பிறந்தநாளை யொட்டி தூத்துக்குடியில் காங்கிரஸ் சாா்பில் 19ம் தேதி மினிமாராத்தான் போட்டி நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் அறிக்கை