தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பேருந்து நிலையம் பல்வேறு வணிக வளாகம் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் அண்ணா பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இதில் பல கடைகள் வாடகைக்கு எடுத்தவர்கள் திரும்ப ஒப்படைத்து விட்டனர். ஆரம்பம் முதலே அண்ணா பேருந்து நிலையம் கடையில் பல்வேறு பிரச்சனைகளைத் தான் சந்தித்து வருகிறது. தற்போது அண்ணா பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகள் ஒவ்வொரு கடைக்காரரும் பல லட்சங்கள் பாக்கி வைத்துள்ளவர்களும் இருக்கின்றனர் பல்லாயிரக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்தவர்களும் இருக்கிறார்கள் ஆனால் மாநகராட்சி வாடகைக்கு விடும் போது வாடகையை தவறாமல் செலுத்த வேண்டும் என்று உறுதிமொழி பெறுகின்றனர் ஆனால் எந்த ஒரு கடைக்காரரும் வாடகை ஒழுங்காக செலுத்துவது கிடையாது. அதுபோல மாநகராட்சி நிர்வாகம் கடைகளில் தான் வாடகைக்கு விட்டுள்ளது ஆனால் கடையை வாடகைக்கு எடுத்தவர்கள் கடையை பெயரளவுக்கு வைத்துக் கொண்டு இரு புறம் வாசல் கொண்ட கடைக்காரர்கள் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து தான் கடை வைத்துள்ளனர் ஆனால் மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பது கிடையாது ஏதாவது புகார் என வந்தால் மட்டும் நடவடிக்கை எடுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அண்ணா பேருந்து நிலையத்தில் கடை வாடகை பாக்கி மட்டும் கோடிக்கணக்கில் இருக்கிறது ஆனால் மாநகராட்சியில் பணிபுரிகின்ற பணியாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் ஒரு மாதம் கூட சம்பளம் வழங்கியது கிடையாது நான்கு நாள் ஐந்து நாள் கழித்து தான் மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள கடை வாடகை கெடுத்தவர்களிடம் பாக்கி தொகை இல்லாமல் வாடகை பாக்கிைய செலுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்நிலையில் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள மூன்று கடை ஒப்பந்தத்தை ரத்து செய்ய உதவி ஆணையர் அதற்கான கோப்புகள் தயார் செய்து மாநகராட்சி ஆணையர் ப்ரியங்காவிற்கு அனுப்பி உள்ளார். உடனடியாக அந்த மூன்று கடைக்காரர்களும் அதிகாரத்தில் இருக்கும் நபரை சந்தித்து தங்களது கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டாம் என கோரிக்கை வைத்தனர் உடனடியாக உதவி ஆணையரிடம் தொடர்பு கொண்டு அதிகாரத்தில் இருக்கும் நபர் நான் கோப்புகளை ஆணை எனக்கு அனுப்பி விட்டு நீங்கள் ஆணையரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று உதவி ஆணையர் கூறிவிட்டார். தற்போது இது தொடர்பாக ஆணையர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது தான் கேள்விக்குறியாகவே உள்ளது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அடங்கிப் போவாரா ஆணையர் இல்லை அந்த மூன்று கடைக்காரர்களின் உரிமத்தை ரத்து செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதுபோல அண்ணா பேருந்து நிலையத்தில் இருபுறம் வாசல் உள்ள கடை ஒரு புறம் சுவர் எழுப்பி முழுமையாக அடைத்து விட வேண்டும் அப்போது தான் ஆக்கிரமிப்பு என்பது கட்டுப்படுத்த முடியும் மாநகராட்சி நிர்வாகம் அண்ணா பேருந்து நிலையத்தில் முழுவதும் மக்கள் பயன்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் பாரபட்சமின்றி வாடகை பாக்கி வைத்துள்ள கடைக்காரர்களின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது தான் கோரிக்கையாகவே உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகள் முதல் சாதாரண பணியாளர்களை தன்னுடைய உறவினர் பெயரிலும் பினாமி பெயரிலும் அண்ணா பேருந்து நிலையத்தில் பல கடைகளை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.