தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பல்வேறு பணிகளை பார்வையிடுவதற்காக மேயர் ஜெகன் பொியசாமி பூபாலராயபுரம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அவரது காரை பார்த்த பெண்கள் வணக்கம் தொிவித்தனா். உடனே காரில் இருந்து இறங்கி பெண்களிடம் என்ன என்று கேட்டாா் அப்போது பெண்கள் அதற்கு எங்கள் பகுதியில் சரியாக குடிநீர் வருவதில்லை வாழ்வு ஆப்ரேட்டரிடம் கேட்டால் முறையான பதில் இல்லை என்று கூறினார்கள்.
உடனடியாக பணிகளைப் பார்வையிட செல்லாமல் பூபால்ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி குடிநீர் நீரேற்றுநிலைய தொட்டிக்கு சென்று அங்கு பணியில் இருந்த பணியாளரிடம் வாழ்வு ஆப்ரேட்டர் எங்கே என்று கேட்டார். அதற்கு அங்கு இருந்த பணியாளர் வெளியே சென்றுள்ளார் என்று கூறினார் அப்போது அங்கு பணியில் இருந்த பணியாளரிடம் குடிநீர் அளவு விநியோகம் செய்யப்படுகின்ற பதிவேடு வேண்டுமென்று கேட்டு அதனை வாங்கி பார்த்தால் அப்போது இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து எந்தப் பகுதிக்கு எல்லாம் செல்கிறது என்ற விபரங்களையும் கேட்டாா். அதன்படி அங்கு இருந்த பணியாளரிடம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை குடிநீர் விநியோகம் செய்யக்கூடாது மூன்று சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுகிறது அதனை சரியான முறையில் செய்ய வேண்டும் . நாளை 3 சப்ளை எந்த நேரம் எல்லாம் செய்யப்படுகிறது என்ற விபரம் எனக்கு வேண்டும் குடி தண்ணீர் விநியோகத்தில் எந்த விதமான தாமதமும் இருக்கக் கூடாது அதனால் தான் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் என்று அங்கு இருந்த பணியாளரிடம் கூறினார்.
அதன் பிறகு புகார் தெரிவித்த பெண்களை மீண்டும் நோில் சந்தித்து இரண்டு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு உங்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று கூறினார் அதற்கு அந்தப் பெண்கள் எங்களது புகாரை கேட்டு உடனடியாக விசாரித்து மீண்டும் எங்களிடமே வந்து விபரங்களை கூறியதற்கு மேயா் ஜெகன் பொியசாமிக்கு நன்றி தொிவித்தனா்.
ஆய்வின் போது மண்டலத்தலைவா் நிா்மல்ராஜ், உதவி செயற்ெபாறியாளர் ராஜேஷ்கண்ணா, உள்பட அரசுத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.