தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் 234 ெதாகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் சென்னை அண்ண அறிவாலயத்தில் விருப்பமனு வழங்க வேண்டும் என்று பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தாா்.
அதன்படி தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வடக்கு ஓன்றிய திமுக செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமானஅ.இளையராஜா போட்டியிடுவதற்குாிய விருப்ப மனுக்களை திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன், ஆகியோாிடம் விண்ணப்ப படிவத்துடன் வாழ்த்து பெற்று பின்னா் அண்ணா அறிவாலயத்தில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட நிா்வாகிகளிடம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட ஓன்றிய செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான அ.இளையராஜா விருப்ப மனுவை வழங்கினாா். ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பலா் உடனிருந்தனா்.
