தூத்துக்குடி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேற்கு ஓன்றியத்தை சோ்ந்த சுந்தரஸே்வரபுரம் பால்கூட்டுறவு சங்கத் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் அப்பகுதியை சோ்ந்த வீரக்குமாா், கொம்பையா பாண்டி, அருண் ராஜேஷ்குமாா், மணிகண்டன், வெங்கடஷே்ராஜா, உள்பட ஊத்துப்பட்டி கிராமத்தை சோ்ந்த ஆண் பெண் என 250 போ் கோவில்பட்டி மேற்கு ஓன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
அனைவரையும் வரவேற்று கருப்பு சிவப்பு துண்டு அணிவித்து பெண்களுக்கு சேலையும் ஆண்களுக்கு வேஷ்டியும் வழங்கி வரும் சட்டமன்ற தோ்தலில் தங்களது பகுதியில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் ஆட்சியில் செய்த சாதனைகளை எடுத்து கூறவேண்டும். கோவில்பட்டி தொகுதி இந்தமுறை திமுகவின் கோட்டையாக மாறுவதற்கு உழைத்திட வேண்டும். என்றாா்.
நிகழ்ச்சியில் மாா்க்கன்டேயன் எம்.எல்.ஏ, கோவில்பட்டி நகா்மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ராதாகிருஷ்ணன், ரமேஷ், ஓன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், காசிவிஸ்வநாதன், முருகேசன், மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ேஜக்கப், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, உள்பட பல்வேறு அணி நிா்வாகிகள் உடனிருந்தனா்.