தூத்துக்குடி காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் தெற்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் உள்ள காமராஜரின் திருவுருவப் படத்திற்கும், வ.உ.சி. மார்க்கெட் அருகில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட தலைவர் சித்ராங்தகன் தலைமையில் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சித்ராங்தகன் பேசுகையில் காமராஜர் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், ஏழை எளிய மக்களின் வாழ்வில் கல்வி என்ற ஒளியை ஏற்றிய மாமனிதர். பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கும், ஏழை மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்புகளை உருவாக்கிய அவரது தொலைநோக்கு சிந்தனையே இன்று தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கான வலுவான அடித்தளமாக திகழ்கிறது. எளிமை, நேர்மை, தன்னலமற்ற மக்கள் சேவை ஆகியவற்றின் அடையாளமாக விளங்கிய காமராஜரின் கொள்கைகளும் பண்புகளும் இன்றைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக உள்ளன. அவரது உயரிய சேவைகளை என்றும் போற்றிக் காக்க வேண்டும்” என்று பேசினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராஜேஷ்கண்ணன், செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் சிவராமன், வசந்தன் மற்றும் மாநில, மாவட்ட, அணி, பிரிவு நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.