தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக (SP) சி. மதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு திருநெல்வேலி மாநகர மேற்கு துணை ஆணையாளராக (Deputy Commissioner of Police – West) பணியாற்றி வந்தார்.
காவல் துறையில் திறமையான நிர்வாகத்திற்கும், சட்டம் மற்றும் ஒழுங்கை சிறப்பாக பேணியதற்கும் பெயர் பெற்றவர் சி.மதன். திருநெல்வேலி மாநகரில் பணியாற்றிய காலத்தில் பல்வேறு குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை மேலும் வலுப்படுத்தவும், பொதுமக்கள் மற்றும் காவல்துறை இடையிலான நல்லுறவை மேம்படுத்தவும் அவர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்கும் சி.மதனுக்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.