தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வசதிகளை பொதுமக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு இல்லாமல் உள்ள மழை நீர் தேங்கும் இடங்கள் ஆகியவற்ற ஆய்வு செய்து அங்கு என்ன அமைக்கலாம் என்று மேயர் ஜெகன் பொியசாமி பல கட்டங்களாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்றும் மக்களுக்கு தேவையானவைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி அம்பேத்கர்நகர் ஸ்டெம் பார்க் அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மழைக்காலங்களில் மழை நீர் தேங்க கூடிய பகுதியாகவும் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் அந்த இடம் இருந்து வந்தது அந்த இடத்தில் மழை நீரை தேக்கி வைக்கும் ஏரி ஒன்று உருவாக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் கடந்த ஆண்டு 21.7.2025 அன்று பணி செய்வதற்கான ஆணை வழங்கப்பட்டு 306 லட்சம்ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதன்படி பணிகளை 12 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி அதிகாலை நேரத்தில் அங்கு நடைபெறும் பணிகளை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார் அப்போது பணிகளை விரைவாக உடனடியாக முடிக்க வேண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வர வேண்டும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் மேலும் பொதுமக்கள் ஏரியை சுற்றி நடைபயிற்சி மேற்கொள்ளும் போது அது ஒரு சந்தோசமாக பொதுமக்களுக்கு இருக்கும் அதுதான் மாநகராட்சி நிர்வாகத்திற்கு முழு திருப்தி என்று தெரிவித்தார் மேலும் அதிக மின் விளக்குகள் பொருத்த வேண்டும் உடனடியாக கதவுகள் அமைக்கப்பட்டு பொருத்த வேண்டும் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஒரு காலத்தில் இந்த பகுதி முழுக்க முழுக்க மழை நீர் தேங்கும் பகுதியாகவே இருந்தது குறிப்பாக ஏரி அமைக்கப்படுகின்ற இடத்தில் ஆறு மாதம் காலம் வரை மழைநீர் தேங்கியிருந்து அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு பெரும் இடையூறாகவே இருந்தது தற்போது அங்கு ஏரி அமைக்கப்படுவதால் வரும் காலத்தில் மழை நீர் 100 சதவீதம் தேங்காது அதுபோல பல்வேறு குற்ற செயல்கள் நடைபெறும் இடமாகவே அது இருந்து வந்தது பணிகள் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு வரும் போது இரவை பகலாக்கும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்படுகிறது மேலும் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் ஆகையால் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே அமையும் என்று கூறப்படுகிறது. ஆய்வின் போது மண்டலத்தலைவர் நிா்மல்ராஜ், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா, உள்பட அரசுத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.