தூத்துக்குடி.
ஊர் பொது பைப்பில் தண்ணீர் எடுக்க கூடாது ஊர் கோவிலுக்குள் நுழைய கூடாது ஊர் தெருவிற்குள் நடமாட கூடாது என்று தடுத்தும், மனித உரிமை மீறல், எங்களது வாழும் உரிமையை பறித்தும், எங்கள் மீது வன்முறையை ஏவி விட்டு சட்டமுறணாக செயலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாதவன்குறிச்சியை சார்ந்த வயதான மூதாட்டி ராதா என்பவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
அம்மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: எனது கணவர் வேலாயுதம் மாதவன்குறிச்சியில் பனையேறி பிழைப்பு நடத்தி வருகிறோம். எனக்கு 2 ஆண்கள், 1 பெண் மக்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். எனது கணவர் மாதவன்குறிச்சியை சார்ந்த ராஜசேகர் என்பவரது பனையை குத்தகைக்கு எடுத்து அதனை செலவு செய்து முள்வேலி அமைத்து பதநீர் எடுத்து வருகிறார். நான் அவருக்கு உதவியாக வேலை செய்கிறேன். இந்த நிலையில் 10.06.2025 அன்று மாதவன்குறிச்சியைச் சார்ந்த திரட்டிமுத்து நாடார் மகன் சுயம்புலிங்கம் மற்றும் அமராபுரத்தைச் சார்ந்த பேச்சிமுத்து என்ற முட்டைகோஸ் ஆகியோர்கள் காலை 9.30 மணியளவில் வந்து எனது முள்வேலி அப்புறப்படுத்தி எங்களுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக பதநீர் இறக்கி குடித்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் நானும் எனது கணவரும் வந்து ஏன் இப்படி சட்டமுறணாக அத்துமீறி நுழைந்து திருட்டுத்தனமாக முள்வேலியை அப்புறப்படுத்தி பதநீரை திருடுகிறீர்கள் என கேட்டதற்கு, அப்படி தான்டா செய்வேன், அனாதை பயல, தேவடியா பயல, உன்னை அடித்தால் இந்த ஊர்ல எவன்டா கேட்பான், என்று சுயம்புலிங்கமும், முட்டை கோஸும் கூறிக்கொண்டு எனது கணவரை அடிக்க பாய்ந்து வந்தனர். உடனே நான் ஏன் இவ்வாறாக அராஜகம் செய்கிறீர்கள் என கேட்டதற்கு என்னை வயதான பெண் என்றும் பாராமல் பேச்சிமுத்து என்ற முட்டைகோஸ் என்னை பார்த்து கூதி மொவள மரியாதையா உன் புருஷனை இங்கிருந்து கூட்டிட்டு போகன்னா உன்னையும், உனது கணவரையும் வெட்டி கொன்று பனைமரத்திற்கு உரமாக வைத்து விடுவேன் என்று கையில் பாலை அரிவாளை வைத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தார்.
அச்சமயம், சுயம்புலிங்கம் கீழே கிடந்த பனை மட்டைiயை எடுத்துக் கொண்டு என்னையும், எனது கணவரையும் அடிக்க வந்தார். நானும் எனது கணவரும் உயிர் பயத்தில் அலறி சத்தமிட்டோம். அப்போது, அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு வரவும், சுயம்புலிங்கம் என்னையும், எனது கணவரையும் பார்த்து, தேவடியா மக்கா, நீங்க இந்த ஊரில் இருக்க கூடாது. மரியாதையா ஊரை காலி செய்து ஒடவில்லைன்னா, உங்களை கொலை செய்து தடம் தெரியாமல் செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்து சென்று விட்டார்.
நான் நடந்த விபரத்தை சென்னையில் உள்ள ராஜசேகரிடம் போன் செய்து தெரிவித்து விட்டேன். ராஜசேகர் என்பவர் சுயம்புலிங்கத்திற்கு உறவினர் ஆவார். அதன்பின்பு சென்னையில் குடியிருந்து வரும் மாதவன்குறிச்சியை சார்ந்த ஜனகன், ராஜசேகர் ஆகியோர்கள் எனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு, சுயம்புலிங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், நீ மன்னிப்பு கேட்கவில்லை என்றால் உன்னையும் உனது குடும்பத்தினரையும் மாதவன்குறிச்சி கிராமத்திலிருந்து விலக்கி வைத்து விடுவதாக மிரட்டினர். மேலும், ஜனகர், எனது கணவரிடம் போன் செய்யும்போது நீ மன்னிப்பு கேட்கவில்லையென்றால் கோவில் திருவிழாவிற்கு வரும்போது உன்னையும் உனது குடும்பத்தாரையும் அடித்து விரட்டி விடுவோம். ஊர் மக்கள் முன்பு அடித்து அவமானப்படுத்தி ஊரை விட்டு வெளியேற்றுவோம் என மிரட்டினார். மேலும், இதுசம்பந்தமாக எங்களை ஊரை விட்டு ஒதுக்கி விடுவதாக ராஜசேகர் செல்போனில் அடிக்கடி மிரட்டி வருகிறார்.
மேற்கண்ட எதிர்மனுதாரர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு எனது கணவரை பார்த்து, உன்னை அடித்தால் யார்டா கேட்பார் அனாதை பயல என சுயம்;புலிங்கம், முட்டைகோஸ் ஆகியோர் நேரிலும், ராஜசேகர், ஜனகர் ஆகியோர் செல்போன் மூலமும் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
ஊர் தலைவரான கண்ணன் என்பவரும் இவர்களுடன் கூட்டுசேர்ந்து கொண்டு 12.06.2025 அன்று ஊர் மக்களுக்கு ஓர் அறிவிப்பு என்று சென்னையில் ஒரு கூட்டம் நடைபெற்றதாக கூறி சுயம்புலிங்கத்திடம் எனது கணவர் மன்னிப்பு கேட்காவிடில் ஊர் கோவில் வரியில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள் என ஓர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனை ‘மாதவன்குறிச்சி மேலூர் ஊர்நிர்வாகம்’ என்ற வாட்ஸ்அப் குரூப் மூலமாக பகிர்ந்துள்ளனர். மேற்படி எதிர்மனுதாரர்களின் இந்த செயல் சட்டமுறணாகும். ஊர் பொதுக்கோவிலுக்கு வரி செலுத்த கூடாது என்றும் ஊரை விட்டு எங்கள் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக மேற்கண்ட எதிர்மனுதாரர்கள் எங்களை ஒதுக்கி வைப்பது சமூக ரீதியாகவும், சட்டரீதியாகவும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். இதுபோன்ற செயல்கள் மனித உரிமையை மீறுவதாகும். மேற்கண்ட எதிர்மனுதாரர்கள் எங்களது வாழும் உரிமையை பறித்து வருகின்றனர். எங்களை ஊர் பொது பைப்பில் சமைப்பதற்கு கூட தண்ணீர் எடுக்க கூடாது என்றும், ஊர் கோவிலுக்குள் நுழைய கூடாது என்றும், ஊர் தெருவிற்குள் நடமாட கூடாது என்றும் மனித உரிமை மீறல் செய்து வருகின்றனர். எங்கள் மீது வன்முறையை ஏவி விட்டு எங்களது வாழும் உரிமையை பறித்து வருகின்றனர்.
ஆகவே, தாங்கள் சமூகம், ‘மாதவன்குறிச்சி மேலூர் ஊர்நிர்வாகம்’ என்ற வாட்ஸ்அப் குரூப் மூலமாக செய்தி பரப்பி எங்களை ஊர் பொதுக்கோவிலுக்கு வரி செலுத்த கூடாது என்றும், ஊரை விட்டு எங்கள் குடும்பத்தை ஒதுக்கி வைத்தும், மேற்கண்ட எதிர்மனுதாரர்கள் எங்களது வாழும் உரிமையை பறித்தும், எங்களை ஊர் பொது பைப்பில் சமைப்பதற்கு கூட தண்ணீர் எடுக்க கூடாது என்று தடுத்தும், ஊர் கோவிலுக்குள் நுழைய கூடாது என்று தடுத்தும், ஊர் தெருவிற்குள் நடமாட கூடாது என்று தடுத்தும், மனித உரிமை மீறல், எங்களது வாழும் உரிமையை பறித்தும், எங்கள் மீது வன்முறையை ஏவி விட்டு சட்டமுறணாக செயலில் ஈடுபடும் மேற்படி எதிர்மனுதாரர்கள் மீதும் அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று அம்மனுவில் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த போது தூத்துக்குடியை சார்ந்த பிரபல வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் உடனிருந்தார்.
“யாரும் பேச கூடாது, யாரும் தண்ணீர் கொடுக்க கூடாது” என ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட கலெக்டரிடம் மனு
