சீமானின் கள் இறக்கும் போராட்டத்தை தடை செய்ய காவல்துறை தவறியது ஏன்?
கள் இறக்கும் போராட்டம் நடத்திய சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்து வந்த நிலையில் பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது கள் போதை பொருள் என்று கூறும் டாக்டர் கிருஷ்ணசாமி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடையில் விற்கும் மதுவை ஊட்டச்சத்து என்று நினைக்கிறாரா??
கள் போதை பொருள் என்று நிரூபித்தால் 10 கோடி தர தயாராக உள்ளேன் என ஐயா நல்லுசாமி பகிரங்கமாக தெரிவித்து வருகிறார். டாக்டர் கிருஷ்ணசாமி கள் போதை பொருள் என நிரூபிக்க தயாரா?? கள் உணவில் ஒரு பகுதி என்பதை தெரிந்தும் தேர்தல் காலங்களில் அரசியல் செய்யும் டாக்டர் கிருஷ்ணசாமி பனைத் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த உணர்வையும் அவமதிக்கும் வகையிலும் கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறிவரும் டாக்டர் கிருஷ்ணசாமி தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் பனைத் தொழிலாளர்களிடமும் தமிழக மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் தவறும் பட்சத்தில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் டாக்டர் கிருஷ்ணசாமி எந்த தொகுதியில் நின்றாலும் பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு சார்பில் எமது இயக்கத்தைச் சார்ந்த இளைஞர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி பனைத் தொழிலாளர்கள் ஆதரவோடு டாக்டர் கிருஷ்ணசாமி படுதோல்வி அடையும் வரை தேர்தல் பணியாற்றுவோம் என பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் தனது கண்டன பதிவில் தெரிவித்துள்ளார்.