தூத்துக்குடி மாநகராட்சியில் பொறியியல் பிரிவில் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவர் மாநகராட்சி பகுதியில் நடைபெறுகின்ற பணிகளை நேரில் பார்வையிட்டு கையெழுத்திட வேண்டும் என்றால் 3 சதவீத கமிஷன் வேண்டும் பணிகளை பார்வையிடாமல் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு கையெழுத்து போட வேண்டும் என்றால் 5 சதவீத கமிஷன் வேண்டும் என்று கராராக வசூல் செய்கிறார் இது தொடர்பாக மாநகராட்சி ஆணையா் ப்ாியங்காவிற்கு ஒப்பந்தக்காரர் தகவல் கொடுத்துள்ளாா். ஆனால் ஆணையர் ப்ாியங்கா எந்த ஒரு நடவடிக்கையும் உயர் அதிகாரி மீது எடுக்கவில்லை அதற்கு அடுத்த அதிகாரிகள் ஐந்து பேருக்கு ஒவ்வொரு சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டும் மாநகராட்சியை பொருத்தவரை பொறியியல் துறையில் 9 சதவீதம் முதல் 11 சதவீதம் வரை தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்ததாரரிடம் பண வசூல் செய்யப்படுகிறது. முன்பெல்லாம் ஐந்து முதல் ஆறு சதவீதம் தான் மொத்த சதவீதம் கமிஷனாக இருந்தது ஆனால் தற்போது ஒன்பது முதல் 11 சதவீதமாக மாறிவிட்டது அதுவும் விசித்திரமான முறையில் பணிகளை பார்வையிடாமல் கையெழுத்துப் போட வேண்டும் என்றால் ஐந்து சதவீதம் கமிஷன் கேட்பது தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாநகராட்சியில் தான் அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தூய்மையான ஆட்சி லஞ்சம் இல்லாத ஆட்சி என்று தொடர்ந்து கூறிவரும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தூத்துக்குடி மாநகராட்சியில் அதிகாரிகள் வசூல் செய்வதை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் இத்தனைக்கும் நகராட்சி நிர்வாகம் தமிழக முதலமைச்சரின் கைவசம் தான் உள்ளது அப்படி இருந்தும் தூத்துக்குடி மாநகராட்சியில் பொறியியல் துறையில் பண வசூல் அதிக அளவில் நடைபெறுகிறது . திரைப்பட நடிகரும் இயக்குனருமாக இருந்தவரின் பெயர் கொண்ட அதிகாரி தான் முதன்முதலாக தூத்துக்குடி மாநகராட்சியில் பணிகளை பார்வையிட்டால் 3சதவீதம் பார்வையிடா விட்டால் 5 சதவீதம் என்ற திட்டத்தை தமிழகத்தில் முதன்முறையாக அமுல்படுத்தி சாதனை படைத்துள்ளாா். என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் லஞ்சம் இல்லாத தூய்மை ஆட்சி முதல்வா் விஜய் தூத்துக்குடி மாநகராட்சியில் கொடி கட்டி பறக்கும் அதிசயமான முறையில் வசூல் வேட்டை