தூத்துக்குடி காயல் பட்டிணம் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த ரிஸ்வான் ஆஷிக் என்பவர், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயற்சியதாக அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து இளைஞரைப் பிடித்து கட்டி வைத்து கொலை வெறி யோடு தாக்கியதை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது. மேலும் கட்டி வைத்து தாக்கியதில் மிகவும் மோசமான நிலை அடைந்த ஆஷீக்கை காவல் துறையினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்க பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். ஆஷீக் செய்தது தவறாக கூட இருக்கலாம் ஆனால் தனி ஒரு நபரை கட்டி போட்டு மிருகத்தனமாக அடித்தே கொள்வது எந்த விதத்திலும் நியாமாக இருக்கும் .மேலும் சட்டத்தை தனது கையில் எடுத்து கொண்டு கும்பலாக ஒன்று சேர்ந்து ஆஷீக்கை அடித்தே கொன்றதை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. எனவே. ஆஷீக் என்ன தான் தவறு செய்தாலும் அவரை பிடித்து அருகில் உள்ள காவல் துறையினரிடம் ஒப்படைத்திருந்தால் சட்டம் கொடுக்கும் தண்டனை அவர் அனுபவித்து உயிரோட இருந்துருப்பார். மேலும் கொடூரமான முறையில் தாக்கி படு கொலை செய்யும் இத்தகை செயல் மனித நேயமற்ற செயலாக தான் பார்க்க முடிகிறது எனவே கண்துடைப்புக்காக 5 பேர் மட்டும் கைது செய்ய பட்ட இருக்கிறதா என்கிற சந்தேகம் எழுகிறது. ஆகவே இச்சபவத்தில் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்ட குற்றவாளிகள் 5 பேரிடமும் மறு விசாரணையை முன்னெடுக்க வேண்டும். ஏனென்றால் இக்கொலையில் சம்பந்த பட்ட நபர்கள் யாரும் சட்டத்திலிருந்து தப்பி விட கூடாது. ஆகவே ராமநாதபுரம் மாவட்டம் காவல் துறை டிஐஜி தேஷ்முக் சேகர் சஞ்சய், மற்றும் எஸ்பி சந்தீஷ் தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
கீழக்கரையில் இஸ்லாமிய இளைஞர் அடித்து கொலை சட்டத்தை கையில் எடுப்பதா? மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம் !