தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழகம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய சமூகநீதி விருது 2026 விழாவில், 60-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நேரில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றுச் சிறப்பித்தனர்.
விழாவில் சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர், பொதுச் செயலாளர் ஜெகன், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினரும் இணைத் தலைவருமான மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு, மண்டல தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர் சந்துரு ஆகியோர் கலந்து கொண்டு வழக்கறிஞர்களுக்கு விருதுகளை வழங்கிக் கௌரவித்தனர்.
மேலும், கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த தலைவர் சேவியர் பிச்சை, திருநெல்வேலி மண்டல இளைஞரணித் தலைவர் சகாயராஜ், கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த செயலாளர் ஆரோக்கிய அருள்ராஜ், விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த செயலாளர் பிரின்ஸ், இராமநாதபுரம் மண்டலத் துணைத் தலைவர் தங்கப்பாண்டி, நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த தலைவர ராஜா சிங் வேலாயுதம், ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த தலைவர் சாஸ்தா சிவா, மாநிலத் துணைத் தலைவர் சுப்பையா, மாநிலத் துணைச் செயலாளர் பேச்சிமுத்து, தூத்துக்குடி மாவட்டத் துணைச் செயலாளர் சுடலைமுத்து உள்பட பலா் விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
இவர்களுடன் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சட்ட உரிமைகள் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.