தூத்துக்குடி காமராஜா் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் நகர செயலாளரும் முன்னாள் தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவருமான ஏசாதுரை தலைமையில் அந்தோனியார் கோவில் அருகில் உள்ள அவரது சிலைக்கும் சிவன் கோவில் அருகில் உள்ள மாவட்ட அலுவலகத்தின் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
விழாவில் முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்ஜிஆர் தங்கம், முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் மாரியப்பன், முன்னாள் தொகுதி செயலாளர் ஜெயராமன், முன்னாள் பகுதி செயலாளர் முத்து, முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ராமகிருஷ்னன், முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்துக்குமார், முன்னாள் மேற்கு பகுதி எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் கணேசன், முன்னாள் பாசறை தலைவர் மகாராஜன், சபிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்