தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி காலபைரவர் சித்தர் பீடத்தில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜையை முன்னிட்டு பால் தயிர் சந்தணம் பன்னீர் மஞ்சள் குங்குமம் உட்பட அபிேஷகம் மற்றும் அனைத்து ராசிக்காரர்களுக்கும் மகாயாகம் சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு நல்ல முறையில் செயல்பட வேண்டியும் மற்றும் உலக அமைதியும் உலக சமாதானம் மற்றும் நல்ல மழை வேண்டி மக்கள் நோய் நொடி இல்லாமல் சிறப்பாக வாழ வேண்டி பக்தர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சீனிவாச சித்தர் செய்திருந்தார்