தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் முத்து வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியுள்ளதாவது மாநகராட்சிக்குட்பட்ட பண்டுக்கரை சாலையில் சாலையின் நடுவே பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு, அதில் தண்ணீர் தேங்கி ஆபத்தான நிலையில் உள்ளது. இந்தப் பள்ளம் இருப்பதே தெரியாத அளவிற்குத் தண்ணீர் தேங்கியிருப்பதால், அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் ஆபத்தைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற சாலைப் பள்ளங்களால் சமீபத்தில் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு உயிர்ப்பலி ஏற்படுவதற்குக் காத்திருக்கிறதா மாநகராட்சி என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த மரணக் குழியை இதுவரை ஏன் மாநகராட்சி அதிகாரிகள் சரிசெய்யவில்லை? உயிரிழப்பு ஏற்பட்ட பிறகுதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? சாலைகளை முறையாகப் பராமரிப்பதும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் மாநகராட்சியின் அடிப்படைக் கடமையாகும். எனவே, பண்டுக்கரை சாலையில் உள்ள ஆபத்தான பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுபோன்று ஆபத்தான நிலையில் உள்ள சாலைகளைக் கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். மீண்டும் ஒரு உயிர்ப்பலி ஏற்படுவதற்கு முன்பாக மாநகராட்சி நிர்வாகம் விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் முத்து வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியுள்ளாா்.
சமீபத்தில் ஒரு உயிர்ப்பலி மீண்டும் ஒரு உயிர்ப்பலிக்காகக் காத்திருக்கும் தூத்துக்குடி பண்டுக்கரை சாலையின் மரணக்குழி மாநகராட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்