தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற போதை பொருள் தடுப்பு பற்றிய பள்ளி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணிக்கு தலைமை ஆசிரிரியர் கணகரத்தினமணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு சுதந்திர காலாட்படை கம்பெனி என்.சி.சி.யைச் சேர்ந்த சுபேதார் ஹவில்தார் ராஜேஷ் பாபு தமிழாசிரியா் மேரி சீதா ஆகியோா் முன்னிலை வகித்தார்கள். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்
மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி பள்ளியில் தொடங்கி தெற்கு சோட்டையன் தோப்பு ஆ சண்முகபுரம் தொழு நோய் மருத்துவமனை வழியாக மாதாநகர் இராஜபாளையம் அய்யர்விளை வழியாக மீண்டும் ஆரேக்கியபுரம் விவிடி நினைவு மேல்நிலைப் பள்ளிக்கு வந்து சேர்ந்தது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விவிடி நினைவு மேல்நிலைப் பள்ளி என்சிசி விளையாட்டு ஆசிரியர் ஆல்பன் செய்திருந்தார்.